கூகுள் தேடல் – மொபைல் , டெஸ்க்டாப் எதில் தேடுவது பெஸ்ட்?

0
537

நமக்குத் தெரியாத விஷயத்தை யாராவது நம்மிடம் கேட்டால் உடனே கைகள் கூகுளை தேடி பதிலைச் சொல்லும். அந்த அளவுக்கு நம்மை பழக்கப்படுத்தியுள்ளது கூகுள். இதில் கூகுள் புதுமைகளை புகுத்தியுள்ளது. ஒரு வார்த்தையை தேடினால் ட்ரில்லியன் பக்கங்களை தேடி பதில் சொல்லும் அளவுக்கு கூகுள் தேடல் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்போது கூகுள் தேடலில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதுமை மேலும் ஆச்சர்யத்தை அளிக்கும் விதமாக உள்ளது. கூகுள் தேடலை டெக்ஸ்டாப்பில் செய்கிறீர்களா? இல்லை மொபைல் போனில் செய்கிறீர்களா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பது தான் அது.

கூகுள் தேடல் என்பது ஒரு குறிப்பிட்ட தேடலுக்கு 60 ட்ரில்லியன் பக்கங்களை தேடி அதன் பிரிவுகளின் அடைப்படையில் ஒரு வரிசையை உண்டாக்கி அதனை தரவரிசை, அல்காரிதம், வார்த்தையோடு பொருந்திய‌ கீ-வேர்டுகள் என அனைத்து வழிகளிலும் மைக்ரோ செகண்டில் தேடி நமக்கு வரிசைப்படுத்தும்.

google1_13018

ஃபேஸ்புக், கூகுள் அலோவில் உங்கள் சாட் ரகசியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

தற்போது மொபைலில் புதுவிதமான தேடலை அறிமுகம் செய்துள்ளது கூகுள். மொபைல் போன்களுக்கு ஏற்றவாறு தனது தேடல் அல்காரிதம்களை மாற்றியமைத்துள்ளது. இதன்மூலம் தேடும் வார்த்தைகளுக்கு மிகத்துல்லியமான தேடல் முடிவுகளை டெஸ்க்டாப்களை காட்டிலும் மொபைல்களில் பெற முடியும் என்பது தான் அது.

அடுத்தக் கட்டமாக மொபைல்-ஒன்லி வரிசையை உருவாக்கி மொபைல் போன்களில் தேடும் கூகுள் தேடல்களுக்கு துல்லியமான முடிவுகளை வழங்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம் டெஸ்க்டாப் தேடல்களின் துல்லியம் மொபைல் தேடல்களின் துல்லியத்தைவிட குறைவாக இருக்கும் என்கிறது கூகுள்.

இதற்கு இரண்டு முக்கியமான காரணங்களை முன் வைக்கிறது கூகுள். முதல் காரணம் கூகுள் தேடல்களில் மொபைல் தேடல்கள் முன்னிலை வகிக்கிறது என்பதும், அதிகப்படியான பயன்பாட்டாளர்கள் மொபைல் தேடலை பெறவே அதிகம் விரும்புவதையும் காரணமாக கூறுகிறது கூகுள்.

google11_13187

மேலும் மொபைல் போன்களுக்காக புதிய AMP (Accelerated Mobile Pages) பக்கங்களை அறிமுகம் செய்துள்ளது. இவை சிறப்பான முடிவுகள் கொண்ட பக்கங்களை தேடுதல் பக்கத்தின் மேல் பகுதியில் காட்டும், மேலும் இந்த பக்கங்கள் அதிவேகமாக படிக்கும் வகையில் லோட் ஆகும். ஃபேஸ்புக் இன்ஸ்டன்ட் பதிவுகளைப் போன்ற பக்கமாக இவை இருக்கும்.

செல்போன்கள் தான் எதிர்காலம் என்பதை உணர்ந்துள்ள கூகுள் தனது முழு கவனத்தையும் மொபைல் ஒன்லி சேவைகளில் செலுத்தியுள்ளது. அனைத்து நிறுவனங்களும் மொபைல் ஒன்லியை நோக்கியே பயணிக்கின்றன. இனி நீங்களே சோதித்து பாருங்கள் உங்கள் டெஸ்க்டாப் கூகுள் தேடலுக்கும், மொபைல் கூகுள் தேடலுக்கும் அவ்வளவு வித்தியாசம் உள்ளது என்று, ஆச்சர்யப்படுவீர்கள். மொபைல் ஒன்லி சர்ச் சேவையை இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. கமான் லெட்ஸ் சர்ஃப் இன் மொபைல்!!!

– ச.ஸ்ரீராம்

Share This: