யூடியூப் வீடியோ தளத்தில் உள்ள ஐந்து புத்திசாலித்தனமான டிரிக்குகள் என்ன தெரியுமா??

0
602

வீடியோ இணையதளங்களில் முன்னணி இடத்தை வகிக்கும் யூடியூப் இணையதளம் தற்போது நமது வாழ்க்கையில் ஒன்றாகிவிட்டது. திரைப்படங்கள், டிரைலர்கள், இசை, நேரடி வீடியோ, பாட சம்பந்தப்பட்ட வீடியோ என ஒரு விக்கிபீடியா போல இதில் இல்லாத விஷயங்களே இல்லை என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நீங்கள் பார்த்த வீடியோக்களை உங்கள் உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ பகிர வேண்டும் என்றாலும் மிக எளிதான் ஆப்சன்களை பயன்படுத்தி பகிர்ந்து கொள்ளலாம். இருப்பினும் இதில் உள்ள பல முக்கிய டிரிக்குகளை இன்னும் பலர் அறிந்து கொள்ளாமல் அடிப்படை அறிவுடன் மட்டுமே உள்ளனர். ஆனால் நமது வாசகர்கள் அப்படி இருக்கலாமா? இதோ உங்களுக்காக யூடியூபில் உள்ள ஒருசில டிரிக்குகளை தற்போது பார்ப்போம்

வீடியோவை பகிர்வதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

நாம் அனைவரும் இருக்கும் பிசியில் ஒரு வீடியோவை முழுவதுமாக பார்க்க நமக்கு நேரம் இருக்காது அல்லது பொறுமை இருக்காது. இந்நிலையில் ஒருசில குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் பார்த்துவிட்டு நாம் பார்த்த பகுதிகளையோ அல்லது நாம் பார்க்க தவறிய பகுதிகளை மட்டுமோ ஷேர் செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் உண்மைதான். நீங்கள் ஒரு குறிப்பிட்ட வீடியோவை பார்த்துவிட்ட நிறுத்திய இடத்தில் இருந்து உங்கள் நண்பர் பார்க்க வெண்டும் என்றால் உடனே அந்த யூடியூப் பக்கத்தில் ரைட் க்ளிக் செய்து பின்னர் ‘Get video URL at current time’ என்பதை காப்பி செய்தால் நமக்கு புதிய URL லிங்க் கிடைக்கும். அந்த லிங்கை நீங்கள் உங்கள் நண்பருக்கு அனுப்பினால் நீங்கள் நிறுத்திய இடத்தில் இருந்து அவர் பார்ப்பார். அவர் முதலில் இருந்து பார்க்க வேண்டிய நிலை ஏற்படாது.

பாப்புலர் வீடியோ குறித்து உங்களுக்கு தெரியுமா?

யூடியூப் இணையதளம் தற்போது புதியதாக பாப்புலர் வீடியோ என்ற ஆப்சனை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் லேட்டஸ்ட் செயுதிகள், புதியதாக வெளிவந்த இசைகள், திரைப்பட ஆடியோக்கள், இசை வீடியோக்கள், டிரைலர்கள் மற்றும் பல முக்கிய பாப்புலர் வீடியோக்களை இதில் பார்க்கலாம். பாப்புலர் என்ற ஆப்சனை மட்டும் க்ளிக் செய்து நீங்கள் முக்கிய வீடியோக்களை பார்க்கலாம்.

வீடியோவை தேடுவதிலும் ஒரு டிரிக்

நீங்கள் ஒரு குறிப்பிட்டுள்ள வீடியோவை தேட வேண்டும் என்றால் அதற்குரிய ஃபில்டரை தேர்வு செய்து பின்னர் தேடினால் உங்களுக்கு சரியான ரிசல்ட் கிடைக்கும்.

தடைகளை தகர்க்கும் டிரிக்குகள் குறித்து பார்ப்போமா?

யூடியூபில் அப்லோட் செய்யப்படும் அனைத்து வீடியோக்களையும் அனைவரும் பார்க்க முடியாது. ஒருசில குறிப்பிட்ட பகுதிகளில் சில வீடியோக்களை பார்க்க முடியாது. அதுபோலவே சில டிவைஸ்களிலும், சில வயதினர்களும் சில வீடியோக்களை பார்க்க முடியாது. இந்த தடையை தகர்ப்பது மிக எளிது.

முதலில் உங்களுக்கு தடையாக உள்ள வீடியோவின் URL ஐ காப்பி செய்து கொள்ளுங்கள். பின்னர் .com என்பதற்கு பின்னால் இருப்பவற்றை டெலிட் செய்யுங்கள். பின்னர் அதில் v/ என்பதை டைப் செய்யுங்கள். அதனை அடுத்து அந்த வீடியோவின் ஐடியை மட்டும் காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்

உதாரணமாக நீங்கள் பார்க்க வேண்டிய வீடியோவின் URL

“https://www.youtube.com/watch?v=ny3hScFgCIQ” இதுவாக இருந்தால் “https://www.youtube.com/v/ny3hScFgCIQ” இதுபோல மாற்றினால் உங்களுடைய தடை தவிடுபொடி ஆகும் என்பதில் சந்தேகமில்லை.

வீடியோ தரத்தை ஒரே மாதிரியாக வைப்பது எப்படி?

நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு வீடியோவின் தரத்தை ஒரே மாதிரியாக வைக்க ஒரு எளிய வழி உள்ளது. யூடியூப் இணையதளத்தில் வலது மேல் புறம் சென்று செட்டிங் பகுதியை க்ளிக் செய்யவும் அதில் account settings – select playback- சென்று அங்கிருக்கும் பெஸ்ட் குவாலிட்டியை தேர்வு செய்தால் நீங்கள் பார்க்கும் வீடியோ அனைத்துமே அதே தரத்தில் உங்களுக்கு தோன்றும்

Share This: