தன் குழந்தையை 22 வருடங்கள் உலகிற்கு காட்டாமல் வைத்திருந்த தாய், காரணம் என்ன?

0
2850

காக்கைக்கும் தன் குஞ்சு, பொன் குஞ்சு தான். எல்லாரிடமும் தன் குழந்தை அழகு, அவர்களின் பெருமை கூறி தான் ஒரு தாய் கூறுவார். ஆனால், இந்த தாய் தன் குழந்தையை 22 வருடங்கள் உலகிற்கு காட்டாமல் வைக்க காரணம்???
csjgdxrveaa5c9a

இவரை இந்த யுகத்தின் சிறந்த தாய் என்று கூறுவது கூட மிகையல்ல. ஒரு வினோத சரும கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தையை நிஜமாகவே பொத்தி, பொத்தி வளர்த்திருக்கிறார் இந்த உன்னதமான தாய்…
csn-w1ukaapz7m

ரோஜர் தாமஸ் மற்றும் டினா!

ரோஜர் தாமஸ் மற்றும் டினா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். இவர்கள் ஒரு மருத்துவமனையில் ‘முய்’ எனும் இந்த அழகான குழந்தையை எடுத்து வளர்க்க முன்வந்தனர்.
czny_qzweau4172

தத்தெடுத்து வளர்த்தனர்!

உண்மையில் அந்த மருத்துவமனை முய்யை ஒரு மனநல மருத்துவமனையில் சேர்க்க தான் முடிவெடுத்தனர். ஆனால், அதை தடுத்து, ரோஜர் தாமஸ் மற்றும் டினா தம்பதி தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தனர்.
cn0kgxsukaebst6

ஹார்லிகுவின் இக்தியோசிஸ்!

ஹார்லிகுவின் இக்தியோசிஸ் (Harlequin Ichthyosis) என்பது ஒருவிதமான அரியவகை சரும நோய். இந்த நோயால் தான் முய் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சரும நோய், மற்றவர்களை விட 10 மடங்கு சரும வளர்ச்சியை உண்டாக்கும். இதற்கு தீர்வோ மருந்தோ இதுவரை இல்லை. இந்த நோய், ஏதோ தீயில் எரிந்தது போன்ற தோற்றத்தை அளிக்கும் தன்மை கொண்டதாகும்.
cnseqrcumaeyxz3

போராடிய முய்!

இந்த நோயாடும் முய் தன் அன்பான குடும்பத்தின் அரவணைப்போடு, தான் எதையும் சாதிக்க முடியும் என போராடினார். இவரது தோல் மிக வறட்சியாக, மீன் செதில்கள் போல, சீரற்று இருக்கும்.
csexs2tuiaa4a0k

பாதிப்புகள்!

இந்த ஹார்லிகுவின் இக்தியோசிஸ் சரும நோயால், அடிக்கடி, கொப்பளங்கள், தொற்று போன்றவை அதிகமாக முய்யிடம் தென்படும். இதற்காக இவர் நிறைய நேரம் வெளியே போகாமலேயே இருக்க நேரிடம்.
cyrnrwnwkaaltvb


ரக்பி ரெப்ரீ!

இதை எல்லாம் தாண்டி இன்று முய் ஒரு ரக்பி ரெப்ரீயாக இருக்கிறார். ஊக்கமளிக்கும் பேச்சாளராக ஜொலிக்கிறார். நிறைய சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டி.
cmv7sklvuaascx7

முயற்சி திருவினையாக்கும்!

சின்ன, சின்ன தடைகள், தோல்விகள் கண்டு நம்மில் பலர் மனம் முடிந்து போகிறோம். ஆனால், வெளியே எட்டிப்பார்க்க முடியாத நிலையிலும், உலகம் தன்னை எட்டிப்பார்க்க வைத்திருக்கிறார் முய். ரோஜர் தாமஸ் மற்றும் டினா போன்ற பெற்றோர் இருந்தால், முய் போன்று குழந்தைகள் நிச்சயம் ஜொலிப்பார்கள், ஜெயிப்பார்கள்.

Share This: