யாழில் இரு வருடங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள கழகங்கள்.

0
1632

கால்ப்பந்தாட்டப் போட்டியின் போது மைதானத்தில் குழப்பம் விளைவித்த யாழ் கால்ப்பந்தாட்டச் சங்கத்தைச் சேர்ந்த சென் மேரிஸ் விளையாட்டுக்கழகம் 2 வருடங்களும் ரோயல் விளையாட்டுக்கழகம் ஒரு வருடமும் போட்டிகளில் பங்கு பற்ற பருத்தித்துறை கால்ப்பந்தாட்டச் சங்கம் தடைவிதித்துள்ளது.

கடந்த மாதம் 17 திகதி நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற சுப்பர் 8 ஆட்டத்தில் ஊரெழு ரோயல் விளையாட்டுக்கழகமும் நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக்கழகமும் மோதிய ஆட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக மைதானத்தில; பெரும் களோபரம் இடம்பெற்றது.

மைதானத்தினுள் இடம்பெற்ற அடிதடியில் இரு அணியையும் சாராத பார்வையாளர் ஒருவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து போட்டிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டு இதுதொடர்பில் போட்டி ஏற்பாட்டாளர்களால் பருத்தித்துறை கால்ப்பந்தாட்டச் சங்கத்திடம் முறையிட்டிருந்தது.

இதனை ஆராய்ந்த கால்ப்பந்தாட்ட சங்கம் நாவாந்துறை சென் மேரிஸ் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதியாட்டத்தின் போதும் இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தனர். இதனால் இவர்களுக்கு எதிர்வரும் 31.12 2018 ஆண்டு வரை போட்டிகளில் பங்கு பெற்ற தடை விதித்ததுடன் மைதானத்தில் காணப்பட்ட பொருட்களுக்கு சேதம் விளைவித்தமைக்காக 50 ஆயிரம் ரூபாவை அபரதமாகச் செலுத்தமாறும் உத்தரவிட்டுள்ளது.

அதேவளை ஊரெழு ரோயல் விளையாட்டுக் கழகத்திற்கும் 31.12 2017 காலப்பகுதி வரை போட்டிகளில் பங்குபெற்ற தடை விதித்ததுடன் 25 ஆயிரம் ரூபாவை அபராதமாகச் செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவித்தல்கள் குறிப்பிட்ட கழகங்களுக்கும் குறித்த கழகங்கள் அங்கம் வகிக்கும் கால்பந்தாட்டச் சங்ககங்களிற்கும் பருத்தித்துறை கால்ப்பந்தாட்டச் சங்கத்தினால் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத் தடைகாரணமாக இவ்விரு அணிகளும் வடமாகாண வல்லவன் தொடர்களிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
img_20161105_093451
img_20161105_093523

Share This: