தமிழ் மக்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம்.

0
3809

அரசியல்பிரமுகர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவிப்பு.
image-0-02-05-e13ea201628ce08649ab3932571924a0be3798dc61414e956349781c357055a4-v

தமிழர் பிரதேசங்களில் பல விளையாட்டு நிகழ்வுகள் தினம் இடம்பெற்றுவருகின்றது அதிகமான நிகழ்வுகள் குறுகிய சிந்தனையுடன் முடிவடைகின்றது, விளையாட்டில் வெற்றிபெறும் கழகங்கள் அல்லது வீரா்களுக்கான வெற்றிக்கேடயங்கள், பதக்கம் பணப்பரிசு வழங்கி கௌரவிக்கப்படுகின்றார்கள்,
image-0-02-05-94f18d12229cf78b8b53279fa8a6e0a2165cf4345ecb831b7253c6a4033e26ac-v

இச்செயற்பாடு நீண்டகாலமாக தமிழ் சமூகத்திடம் உள்ள ஒரு நடைமுறையாகும்,

ஆனால், மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் விளையாட்டு நிகழ்வை நடாத்தி அதன் ஊடாக தமிழ்மக்களுக்கு இன்றைய காலத்தின் தேவையை உணர்த்தியுள்ளது.
image-0-02-05-b854f6f1f9b96a62f5056690f872244e626e5a9a0bd3d2394f145beffe69363a-v

இந்த நூற்றாண்டில் மிகமோசமாக அழிக்கப்பட்ட தமிழ் சமூகம் மீள் எழுவது கடினமானது, எமது பொருளாதாரம் கலாச்சாரம், பண்பாடு, கல்வி, கலை, விளையாட்டு, ஒழுக்கம் மற்றும் ஒற்றுமை போன்றவை சிதைக்கப்பட்டுள்ளது.
image-0-02-05-b2aa4e2afd01d4bc44b9fa7b1f87f69d9c78c18b6fc93c0e626933800d2020fc-v

இதனை தமிழ் சமூகம் கிராம ரீதியாக மீள்உருவாக்கம் செய்யவேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது, அதை மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் சிறப்பாக செய்து முடித்துள்ளது.
image-0-02-05-08362da8465cb665c02e8635492c813db4ecb4307c0db06d4ca3fff8a13fe324-v

இது ஒரு விளையாட்டு நிகழ்வு மட்டும் அல்ல அந்தச் சமூகத்தின் ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு, கூட்டுமுயற்சி, புரிந்துணர்வு, மகிழ்ச்சி மற்றும் ஒழுக்கம் போன்ற உயர்பண்புகளை வெளிப்படுத்திய நிகழ்வும் கூட….

ஒரு கிராமம் வளரவேண்டும் என்றால் தனிநபர்களின் கல்வி உயர்தொழில் வசதிகளை வைத்து வளர்ந்த சமூகமாக கருதமுடியாது.
image-0-02-05-00edeb21edb807a316d69af0cf9bf58385bea3639d6d1065507cc0031388f6bd-v

இவ்வாறு சமூகத்தை ஒற்றுமைப்படுத்துகின்ற நிகழ்வுகளை நடாத்துவதன் மூலமே வளர்ச்சிபெற்ற சமூகமாக உருவாக முடியும்.

ஒரு நபர் தான் வாழும் சமூகத்தால் கௌரவிக்கப்படும் போதுதான் உண்மையான மகிழ்வையும் பெருமையையும் பெறமுடியும், அந்தவகையில் பல்கலைக்கழக மாணவர்களும் 5 ஆம் தர புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
image-0-02-05-39d0129b2ad7644ca4f5f82acb9fd83bef1b063b085b168fabe6731d58a2482e-v

அதே போன்று தமிழ் சமூகத்துக்கு பெருமை தேடிய வீர வீராங்கனைகளை யாரும் கண்டுகொள்வதில்லை, இந்தச் சூழ்நிலையில் வடமாகாண ரீதியாக அனைத்து வீரா்களுக்கும் அழைப்புவிடுத்து இன்று பல நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டு ஊக்கப்படுத்தியுள்ளார்கள், மைக்கல் விளையாட்டுக் கழகத்தினர்.
image-0-02-05-90eedd79e963f521c64c5ef236f9c2bff4dad068b2c3fb578a01b7cd7ea31594-v

இது இன்றைய காலத்தின் தேவை அத்துடன் முன்மாதிரியான செயலும் கூட… இது போன்று தமிழ் பிரதேசங்களில் உள்ள பொது அமைப்புக்கள் இவ்வாறு தூரநோக்கு சிந்தனையுடன் செயற்பட்டால்… கிராமம், பிரதேசம், மற்றும் தமிழ் மாநிலங்கள் மிகவிரைவாக வளர்ச்சிப் பாதையை நோக்கி நகரும்.
image-0-02-05-575ae1e4ea36c117d9055e3a948a5606db76dc5904b250dd44bca9d2d43ff1b8-v

எனவே ஒவ்வொரு கிராம பொது அமைப்புக்களும் இவ்வாறு நிகழ்வுகளை நடாத்த முன்வரவேண்டும் என்று சமூக நலன்விரும்பிகளும், தமிழ் உணர்வாளர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
image-0-02-05-ec99a62316ad8b6d5150e6ceee4373353f47d8fd7f4876ee160491d5a2bfc160-v
image-0-02-05-5c55204b395839fc4dd25b63581e619cddac02c04a8812aa38984b853185f29f-vimage-0-02-05-c1526a3bbd77287d213a1931bf101d57ab710b239bfb51dd81d6adfb64cd8d96-v
image-0-02-05-5baab3a9aad692ef94dc383bdc762feb5f8d7415f3f15d31fe457e10c2f7bc6f-v
image-0-02-05-df31a649988a9bd085b90d42b7de30e93119e6420323a4a823e4a6d9c17ca772-v
image-0-02-05-fe08c7ec1f3941c0c5a3e06db2d08e889bec6964366638ea3f5b02285c9bac60-v
image-0-02-05-7c7d8065942376e329be543a96d4c01f45c3d46a0a8de9a7d819a4bb030adfd9-v
image-0-02-05-4194c622133b9c55c5f2e585103ba307f719c7e0712ea04217831dcab836a4ab-v
image-0-02-05-279ce0a59f69264c6a227545a60abd1973b5cf570d63670649ee4f2ec7a57a18-v
image-0-02-05-646d368d55519a609ffc7bcc6bbc0626bb63c779694a5fe050ee589616eaee90-v

Share This: