மாலு சந்தி மைக்கல் மகுடம், இளவாளை யங்கென்றீஸ் வசம். இறுதிவரை போராடியது ஊரெழு றோயல் அணி

0
1544

மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக் கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்திவந்த உதைபந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டி நேற்றிரவு இரவு 7-30 மணியளவில் பெரும் திரளான ரசிகர்கள் மத்தியில் கழகத்தலைவர் திரு த. வேணுகானன் தலைமையில் ஆரம்பமாகியது.
image-0-02-05-d6914aaf3ac1c516fd0128d252b60f35d6acad7932c5f57628ee88975bf8c5ef-v

இவ் இறுதிப்போட்டியில் யாழ் மாவட்டத்தில் முன்னணி கழகங்களான ஊரெழு றோயல் அணியை எதிர்த்து இளவாளை யங்கென்றீஸ் அணி மோதியது.
image-0-02-05-1648a48f707fba9eb72bcfb5b0546f6f74cef577d355c6abc0ea12ee69208ffc-v

விறுவிறுப்பாக ஆரம்பமாகிய போட்டியில் 9 நிமிடத்தில் றோயல் அணி முன்களவீரா் கஜகோபன் கோலினை பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் சிறப்பாக ஆடியபோதும் முதற்பாதி வரை எந்தவிதமான கோலினையும் போடமுடியவில்லை. 1-0 என்ற கோல்கணக்கில் றோயல் அணி முன்னிலையில் இருந்தது.
image-0-02-05-f1dde90bf2149cfe8223d19d77896ec7942976e752b1f3210631b1a67df7a69d-v

இரண்டாவது பாதி ஆட்டத்தில் 33 நிமிடத்தில் அனோஜன் தனது அணிக்கான கோலினை பெற்றுக்கொடுத்தார்.

விறுவிறுப்பாக தொடர்ந்த ஆட்டத்தில் 41 நிமிடத்தில் மகிபனும், 44 நிமிடத்தில் மீண்டும் அனோஜனும் கோலினை பெற்றுக்கொடுத்து, தமது அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.
image-0-02-05-363cf3a2a14440ff0a21ce336386dfcc17674e6343ae896754225c131a6c6507-v

ஆட்டம் முடியும் சில நிமிடங்கள் இருக்கையில் றோயல் அணி வீரா் கஜகோபன் கோலினை பெற்றுக்கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இறுதிவரை ஊரெழு றோயல் அணி போராடி தோற்றது.

இறுதியில் 3-2 என்ற கோல்கணக்கில் இளவாளை யங்கென்றீஸ் அணி வெற்றி பெற்று மாலு சந்தி மைக்கல் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது.
image-0-02-05-3e5a3397ce24d79e13cb9fa65e550a8c2a350fa6cde072a5f9cac387d58afe82-v

ஆட்டநாயகனாக இளவாளை யங்கென்றீஸ் அணியின் வீரா் அனோஜனும் தொடர்நாயகனாக ஊரெழு றோயல் அணி வீரா் கஜகோபன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

நெல்லியடி செல்லமுத்துஸ் அனுசரனையுடன் சம்பியனாகிய இளவாளை யங்கென்றீஸ் அணிக்கு ரூபா 30,000 பணப்பரிசும், வெற்றிக்கேடயமும், இரண்டாவது இடத்தைப்பெற்ற ஊரெழு றோயல் அணிக்கு ரூபா 15,000 பணப்பரிசும், வெற்றிக்கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
image-0-02-05-4c947cc6a3d594379792adf2937d339835d393ddb63308d15ac77e409f67d3bd-v

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் திரு. மாவை சேனாராஜா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தனர்களாக வடமாகாணசபை உறுப்பினர்கள் திருமதி. ச. ஆனந்தி, திரு. வே. சிவயோகன், திரு. எம்.கே. சிவாஜிலிங்கம், திரு. க. தர்மலிங்கம், திரு. ச. சுகிர்தன், திரு. என். கே. விந்தன் ஆகியோரும் மற்றும் கௌரவ விருந்தினர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பொ. கஜேந்திரகுமார், கரவெட்டி பிரதேச செயலர் திரு. எஸ். சிவசிறி, பருத்தித்துறை மின்சாரசபை அத்தியட்சகர், திரு. கே. கமலகோபன், நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. ஆர்.பி.ஏ பியந்த, வடமராட்சி உதைப்பந்தாட்ட லீக் தலைவர் திரு டி.எம். வேதாபரணம், மாலைச்சந்தை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயத்தலைவர் திரு. எஸ். சிறிசண்முகதேவ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
image-0-02-05-95abeb4ca216b9cadb0a31b2d96991d759d10f64b1bed569dc2223cd4fbc74b5-v
image-0-02-05-293f4c683de976658b702e9f65119f13984535ca1b2a6636209c594f03feaba6-v
image-0-02-05-7922a7b696da660ebff864f54cf5cd6a10b9d6c91ec40a868c36d7d197fb75f1-v
image-0-02-05-cbc3b2b50d3013ad4dbcf75d22f415638be051fc97ef8cf574a55f8966ea599c-v
image-0-02-05-0c2147d49f28ebc1ee5e6c8da02f83dee67d7ec2c925ef197cf4ffc603166a77-v
image-0-02-05-abdc2f2854f91a142c175aa03e7259de4fb8f3a96d98fe35a2aa8091d84ce2f8-v
image-0-02-05-0ce92d5cef875709894c641f6e6a07759637370c6b0f778d8e17083852a21c41-v
image-0-02-05-a51f1c4c72fb05b875e935e9e53840eae87802088ddfff630a2f8685e18e5f26-v

Share This: