சீமானுக்கு ஆதரவளிப்பதை நிறுத்திக்கொள்கிறேன் இன்றோடு.!!!

0
120791

இதுவரை அவரிடம் பழகிய பழக்கத்தின் மூலம் அவரை பற்றியான திடுக்கிடும் தகவல்களை வெளியிடுகிறேன்.

1. அழிக்கவே முடியாது என்று ஆருடம் கட்டிக்கொண்டு திரிந்த ஆரியத்தை ஆட்டம் காண வைத்து விட்டார் இந்த அயோக்கிய சீமான். இவர் மட்டும் ஆரியத்தை அடிக்கடி அடிக்கோடிட்டு காட்டவில்லையென்றால் உத்தம புத்திரர்களான ராஜா, சு.சாமி போன்ற தெய்வங்கள் எளிதாக ஏசிருக்க முடியும் தமிழர்களை. ஆனால் இந்தப் பாவி அதையும் தடுத்து விட்டான். அதனால் அறுத்துவிடுகிறேன் இவன் உறவை இன்றோடு.

2. ஆரியத்தை அழிப்போம் என திரண்ட திருட்டு திராவிடத்தை திண்டாட வைத்தி விட்டான் இந்த திருடன் சீமான். சாதி, மத ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு என களமிறங்கிய கண்ணியவான்களான திராவிட மூத்திர சட்டிகள். தமிழ்நாட்டை முழுவதும் முடிப்பதற்குள் முழித்து கொண்டு இது திராவிட நாடு இல்லை. தமிழர் நாடு என்று முழங்க வைத்து விட்டான். முட்டாள் சீமான். இவன் இதனை இப்படியே தொடர்ந்தால் சாதி, மதம் மறந்து தமிழராக ஓன்று கூடி எங்கள் திராவிடத்தை தீர்த்து விடுவான். இதனால் இவனை தீண்டத்தகாதவனாக நினைத்து விலகுகிறேன் இன்றோடு.

3. தமிழர் நலனில் இந்தியா தேசியம் இரட்டை வேடம் நடத்தி கொண்டு இருக்கும்போது இடையில் எழுந்து இவர்களுக்கு எதிராக இறங்கியவன் இந்த இரக்கமற்ற சீமான். கொடுத்த கச்சத்தீவை திருப்பி கேட்கிறான் எதோ! தமிழன் சேதுபதி சொத்து மாதுரி… காவேரி வேணும் என்று கத்துகிறான் எதோ! இவன் எல்லா நீரையும் குடித்து தீர்க்க போற மாதிரி… அணு உலை வந்தால் அழுகிறான் இவன் வீட்டில் வந்து வெடிக்க போற மாதிரி… மீத்தேன் திட்டத்தை திட்டி தீர்க்கிறான்… கெயில் எரிவாய்வு குழாயைக் கொண்டு வந்தால் கொதிக்கிறான்… ஏதோ! இவன் வீட்டிற்குள் குடையுற மாதிரி… இப்படி எதற்கு எடுத்தாலும் இந்தியாவை எதிர்க்கிறான் இவன் நமக்கு எதிரானவன் என்று எதிர்க்க ஆரம்பிக்கிறேன் இன்றோடு.!

4. அடிமையாக அடகு வைக்கப்பட்ட தமிழர்களை மீட்பேன் என்று சொல்லி இவர்களின் பெருமைகளை மேடைக்கு மேடை பேசி பெருமை பீத்துகிறான். இந்த பேமாளி சீமான்… தமிழர்கள் உலகத்தையே ஆண்டவர்கள் என்று உசுப்பேத்தி விட்டு திராவிட கால்களில் விழுந்தவர்களை எழுப்பி விட நினைக்கிறான் இந்த எதிரி சீமான்… இவனிடம் இருந்தால் நம்மளையும் புரிய வைத்து விடுவான் இந்த புத்திகெட்ட சீமான் ஆகையால் பிரிந்து விடுகிறேன் இவர்களிடம் இருந்து இன்றோடு…

5. மனிதக் கொலைகளை கொள்கையாக மாற்றிக்கொண்ட அரசியல் கட்சிகள் இருக்கும்போது உயிர்நேயம் பேசுகிறான்.. இந்த கொலைகார சீமான்.. அதுமட்டுமில்லாமல் தமிழர்கள் உயிர் நேயவாதிகள் மற்றவர்கள் எல்லாம் மனித நேயவாதிகள் கூட கிடையாது என்று மனசாட்சியே இல்லாமல் மன்றாடிக் கொண்டு இருக்கிறான் மடையன் சீமான்… இவன் செய்யவதை பார்த்தால் பாவி பல்லிக்கு கூட பணியிடம் காட்டுவான் போல… இவன்கூட இனிமேல் இருந்தால் நம்மை கொலை செய்து விடுவான் பாவி… ஆகையால் நின்று விடுகிறேன் இன்றோடு..!

6. உள்ளவனை பார்க்கவே உருப்படியாக ஆள் இல்லை… ஆனால் இவன் அந்நியனையும் ஆதரிக்கிறான் அப்பாவி சீமான்… உள்ள தமிழனை உதை வாங்கிட்டு இருக்குபொழுது ஈழத்தமிழன் என் இனம் என்று எழுகிறான் இந்த இளிச்சவாயன் சீமான்… இப்படியே போனால் அனைத்து தமிழர்களையும் ஒன்றிணைத்து பெரிய தமிழ் தேசியத்தை அமைத்து விடுவான் இந்த தேசத் துரோகி சீமான்… ஆகையால் தேசத் துரோகியுடன் இருப்பதை இனிமேலும் விரும்பவில்லை. விடைபெறுகிறேன் இன்றோடு…

7. கலிகாலத்தில் கால் வைத்து விட்ட பிறகும்,கலை, பண்பாடு மீட்பு என்று அழிந்து போனதை பற்றி அவிழ்த்து விடுகிறான் இந்த அழுக்கு சீமான்… பாரம்பரியத்தை பேசி பறிபோனதை பறிக்க நினைக்கிறான் இந்த பாவி சீமான்… இவனிடம் இனிமேலும் இருந்தால் பாரம்பரியம் என்று சொல்லி பலவற்றை பறித்து என்னை யாவும் பாதுகாக்க சொல்லுவான்… ஆகையால் கழண்டுகொள்கிறேன் இன்றோடு…

8. விதையில்லாத விரைவு காலத்தில் விவசாயம் பண்ணப் போகிறேன் என்று விளையாடிக் கொண்டு இருக்கிறான் இந்த வீனாப்போனா சீமான்… இவனிடம் இருந்தால் இயற்கை விவசாயத்தை இறக்குமதி பண்ணிருவான் போல மறுபடியும்… இதனால் இறங்கிக்கொள்கிறேன் இன்றோடு…

9. கார்பொரேட்களுக்கு கைக்கூலியாக இருந்து கடையை ஓட்டாமல் அவர்களையும் காவு வாங்க நினைக்கிறான் களவாணி சீமான்… இப்படியே போனால் கார்பொரேட் காணாமல் போயி கஷ்டப்படுகிற மக்கள் நன்றாக வாழும் சூழ்நிலை வந்து விடும் ஆகையால் கழுவி விடுகிறேன் இன்றோடு…

10. நடித்து நாட்டைப் பிடிக்கத் தெரியாமல் நரம்பு புடைக்க கத்திக் கத்தியே சாகிறான் சனியன் சீமான்… இப்படியே தொடர்ந்து செய்தால் அனைவரையும் புரிய வைத்து “நாம் தமிழர்கள்” என்று இணைத்து விடுவான்… இவனிடம் இருந்தால் அப்புறம் தமிழனாக வாழ நேரிடும்; வேண்டவே வேண்டாம் இந்தத் தமிழன் பட்டம்… ஆகையால் நழுவி விடுகிறேன் இன்றோடு..!

Share This: