3 நாட்களில் 500 கோடிகளை தாண்டி வசூலில் சாதனை படைத்துள்ளது “பாகுபலி- 2”

0
674

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், சத்யராஜ், நாசர், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்த பாகுபலி–2 படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

உலகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டு உள்ளது. ரூ.450 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட பாகுபலி–2 இரண்டு நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்துக்கு திரையுலகினர் மத்தியில் பாராட்டுகள் குவிகிறது. இந்நிலையில் பாகுபலி 2 – 3 நாட்களில் 506 கோடியை தாண்டி வசூலில் சாதனை படைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Share This: