‘பாகுபலி-2’ படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு காரணம் தெரியுமா?

0
911

‘பாகுபலி-2’ படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்புக்கு என்ன காரணம் என்பதை தனஞ்செயன் விளக்கமாக கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்டு வரும் ‘பாகுபலி 2’ இந்திய ரசிகர்களை மட்டுமில்லாது உலக ரசிகர்களையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெறுவதற்கு என்ன காரணம் என்பதற்கு திரையுலகத்தை பற்றி கட்டுரைகள் எழுதிவரும் தனஞ்ஜெயன் கூறியிருப்பதாவது:

‘பாகுபலி 2’ படத்தின் வசூலைப் பற்றி இன்னும் சில நாட்களுக்குப் பேசிக்கொண்டே இருக்கலாம். இப்படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதற்கு என்ன காரணம் என்பதை யோசிக்கவேண்டும். பிரம்மாண்டமான ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு பேசும் அளவுக்கு இப்படத்தின் உருவாக்கம் அமைந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம். தமிழில் உருவான பல படங்களைப் பார்த்துவிட்டு அரங்குகள் மற்றும் கிராபிக்ஸ் உள்ளிட்ட விஷயங்களை இன் னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என நினைப்போம். ‘பாகுபலி 2’ படத்தைப் பொறுத்தவரை அப்படி ஒரு எண்ணமே தோன்றவில்லை.
201705071547306494_baahubali223-X._L_styvpf

திருட்டு விசிடி, கேபிள் டிவி உள்ளிட்ட பல விஷயங்கள் இருந் தாலும் இதன் பிரம்மாண்டத்தை அனைவருமே திரையரங்குக்கு சென்று பார்க்க விரும்பியுள்ளார்கள். படம் பார்ப்பவர்களை அப்படியே மகிழ்மதி நாட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார்கள். 

ஒவ்வொரு காட்சியையும் பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என நினைத்து உருவாக்கியுள்ளனர். திருட்டு விசிடியில் படத்தைப் பார்த்தவர்கள்கூட அதன் பிரம்மாண்டத்தைக் காண திரையரங்குக்குச் செல்கிறார்கள்.
201705071547306494_baahubali-223-X._L_styvpf

மற்றொரு முக்கியமான விஷயம், இக்கதையில் பேண்டஸி கிடையாது. இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கக்கூடிய படமாக உருவாகியிருக்கிறது. அதேநேரத்தில், அனைத்து மக்களும் ரசிக்கும்படியாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

காதல், காமெடி, பழிவாங்கல், நம்பிக்கை துரோகம் என அனைத்தும் சேர்ந்த கலவையாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பையும் மீறி இப்படம் அமைந்தது. ஆகையால்தான் ரசிகர்களிடையே இப்படத்துக்கு இந்த அளவு வரவேற்பு கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Share This: