பிரித்தானியா ஒக்ஸ்போட்டில் ஓவியக்கண்காட்சியும் நூல் வெளியீடும்

0
437

அன்பார்ந்த உலகத் தமிழ் உறவுகளே!

தமிழர் இனவழிப்பின் உச்சம் 2009 மே 18 அன்றிலிருந்து பல முனைகளாக தமிழர்களாகிய நாம் எமது உரிமைக்காகவும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வேண்டியும் அனைத்து வழிகளிலும் முயற்சிக்கின்றோம்.

அதில் ஒரு அங்கமாக எதிர்கால எமது சந்ததிக்கு, தமிழர் இனவழிப்பின் வரலாற்றை ஓவியங்களாக்கி பாதுகாக்க ”தமிழர் கல்வி கலைபண்பாட்டு நடுவம்” பாரிய முயற்சி ஒன்றை மேற்கொள்கின்றது இதில் 200 ற்கு மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் புகழ்பெற்ற ஓவியரான திரு.புகழேந்தி அவர்களின் ஒவியங்களும் இடம்பெற்றுள்ளது.

மேற்படி நிகழ்வு 13.05.2017 மாலை 3 மணி தொடக்கம் 21.05.2017 மாலை 7 மணி வரையும் உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் ( OX17 3NX ) நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

அத்துடன் எதிர்வரும் 21ம் திகதி 2:00 pm மணி தொடக்கம் 7:00pm மணி வரை மாதாந்த வணக்க நிகழ்வுடன் ஓவியக்கண்காட்சியில் பங்குபற்றிய அனைவருக்கும், புகழ்பெற்ற ஓவியரான திரு.புகழேந்தி அவர்களால், சான்றிதழ்களும், நினைவுப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதோடு, ஓவியர் புகழேந்தி அவர்களின் இரு நூல்களும் வெளியிடப்படவுள்ளது.

எனவே ஓவியக்கண்காட்சியில் பங்குபற்றிய அனைவரும் தவறாது இந்நிகழ்வில் பங்குபெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மேலும் 28.05.2017 அன்று காலை 11 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை மத்திய லண்டன் பகுதியில் அமைந்துள்ள ( Trafalgar Square, WC2N 5DN, Charing Cross, Nearest Tubes Station ) இடத்திலும் காட்சிப்படுத்தப்படும்.

இந்த வரலாற்று நிகழ்வில் அனைத்து தழிழ் உறவுகளும் தங்களது அடுத்த தலைமுறை பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வரவும். அவர்களது காலத்தில் அவர்கள் எம்மைவிட பலமடங்கு வீச்சுடன் செயற்படுவார்கள் அதற்கான அத்திவாரத்தை அமைத்துக்கொடுப்போம்.
நன்றி

தமிழர் கல்வி கலைபண்பாட்டு நடுவம்
பிரித்தானியா
தொடர்பு
07460030304
07404668407

ஓவியர் புகழேந்தி வரைந்த சில ஓவியங்கள்
புகழேந்தியின்+ஓவியங்கள்+(2)
Throgam
tamilmakkalkural_blogspot_pugal13
pukalenthi2-600x450
puzhalanthi

Share This: