இந்திய மத்திய மற்றும் தமிழ்நாடு அரசாங்கங்களின் அரச பயங்கரவாதத்தை வன்மையாகக் கண்டித்து “சுவிஸில்” ஆர்ப்பாட்டம்!!!

0
466

சிறீலங்காப் பயங்கரவாத இனவழிப்பு அரசாலும் மற்றும் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற வல்லாதிக்க சக்திகளாலும் இனவழிப்பு செய்யப்பட்டு வரும் தமிழீழ மக்களை ‘மே 18’ இல் உலக நாடுகளெங்கும் உலகத் தமிழினம் நினைவுகூர்ந்து வருகிறது.

இதை முன்னிட்டு தமிழ் நாட்டிலும் இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்திய மத்திய அரசின் கைக்கூலியாக செயற்பட்டு வரும் தமிழ் நாட்டு அரசு இந்நினைவுகூரல் ஏற்பாடுகளுக்கு தடைவிதித்திருந்தது. அத்தடைகளை மீறி அஞ்சலி செய்ய முயன்ற திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு தோழர்கள் மீது குண்டர் சட்டம் பிரயோகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களை நினைவுகூருதல் மனித பண்பாடாகும். மனித உரிமையாகும். இதற்கே தடை என்றால் பெரிதும் பேசப்படும் இந்திய சனனாயகம் சாகடிக்கப்பட்டு அரச பயங்கரவாதம் தலைதூக்குவத்யே நாம் உணர்கிறோம்.

இக் கொடூர அரச பயங்கரவாதத்தை
கண்டித்து சுவிஸ் Bern இல் அமைந்துள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக கண்டன ஒன்றுகூடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக தமிழர்களின் அபிலாசைகளுக்கும், இறயாண்மைக்கும் எதிராக ஏவப்பட்டுள்ள சதிவலைகளை உடைத்தெறிய ஒன்றுதிரளுமாறு அனைவரையும் அழைக்கின்றோம்.

திகதி:
02.06.2017 (நாளை)

இடம்:
இந்தியத் தூதுவராலயம் – Bern
Kirchenfeldstrasse 28,
CH-3005 Berne,
Switzerland

நேரம்:
16 மணி

Share This: