ஜூன் 18 பிரான்சு பாராளுமன்ற தேர்தல் – தமிழர்கள் கடமையுடன் வாக்களிக்க வேண்டும்! -தமிழீழ மக்கள் பேரவை. 

0
475

பிரான்சில் வரும் ஜூன் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்யும், இரண்டாம் சுற்றுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் வாக்குரிமை பெற்ற தமிழர்களாகிய நாம், தமிழர் நலன்களுக்காக நாடாளுமன்றில் குரல் கொடுத்துவரும் வேட்பாளர்களுக்கு எமது பேராதரவினை வழங்கி, அவர்கள் வெற்றிபெறுவதற்கு வாக்களிப்பது எமது கடமையாகும்.

பிரான்சுவாழ் தமிழ் மக்களுக்கென , பிரான்சு நாடாளுமன்றத்தில் ” தமிழ் மக்களுக்கான குழு” ஒன்றை உருவாக்கி அந்தக் குழுவின் ஊடாகப் பிரான்சு நாடாளுமன்றத்திலும், ஜெனீவா மனிதவுரிமை அவையிலும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் திருமதி Marie George Buffet, அவர்கள் , Dugny, la Courneuve, la Blanc Mesnil , Stain ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொகுதியில் போட்டி இடுகின்றார். ஜூன் மாதம் 11 ஆம் திகதி நடைபெற்ற முதலாவது சுற்றில் இவர் 32% வாக்குகளைப் பெற்று, வரும் ஜூன் 18 ஆம் திகதி நடைபெறும் இரண்டாம் சுற்று தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராகத் தெரிவாகியுள்ளார்.

தொடர்ச்சியாக எமக்காக் குரல் கொடுத்து வரும் ” பிரான்சு பாராளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கான குழுவின் தலைவராக இருக்கும் இவரை, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியபெறச் செய்வது எமது கடமை மட்டுமல்ல மிக அவசியமானதும் கூட! எமக்காக குரல் கொடுத்துவரும் சொற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாம் இழந்துவிடக்கூடாது. இவரால் 2008 ஆம் ஆண்டில் இருந்து பல கால கட்டத்தில் பிரான்சு அரசுடன் எமது குரலாக இவர் செயல்பட்டு வருகிறார், இவர் தொடர்ந்து எமக்காக குரல் கொடுக்க வேண்டிய அவசியமும் எமக்கு இருக்கிறது, ஆகவே Dugny, la Courneuve, la Blanc Mesnil , Stain வாழ் தமிழ் மக்கள் இந்த தேர்தலில் தமது வாக்குகளை இவருக்கு அளிக்கும் படி வேண்டிக்கொள்கிறோம்.

இவரைப் போன்று Argenteuil தொகுதியில் Philippe doucet அவர்களும், Evry தொகுதியில் Manuel Vals அவர்கள், மற்றும் Bas Rhin தொகுதியில் தேர்தலில் நிற்கும் Eric Elkouby ஆகியோருக்கும் அவ்வப் பகுதியில் வாழும் தமிழ் மக்கள் அவர்களுக்கு தமது வாக்குகளை அளிக்கும் படியும் அதே நேரத்தில் அனைத்து தொகுதியிலும் பிரான்சில் வாழும் தமிழ் மக்கள் உங்கள் வாக்குகளைப் பயன்படுத்திக்கொள்ளும் படியும் கேட்டுக்கொள்கிறோம்.

நீங்கள் வாக்களிப்பதன் ஊடாக நீங்கள் வாழும் பகுதியில், தமிழ் மக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற கணக்கு நீங்கள் வாக்களிப்புக்குச் செல்லும் போது அங்கே நிற்கும் கட்சி பிரமுகர்களால் கவனத்தில் எடுக்கப்படும் . அதனை வைத்தே எமது சமூகம் சார்ந்த நலன்களில் அக்கறைப்பட்டுக் கொள்வதற்கோ, அல்லது எமது தேச விடுதலை சார்ந்த விடயங்களிற்கோ தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுக்குத் துணையாக இருப்பார்கள்.

யார் வெற்றிபெற்றாலும், தமிழ் மக்களின் அரசியல் பங்கேற்பு, அரசியலாளர்களின் கவனத்தைப்பெறும். அதனால் அந்த அந்த தொகுதிக்கான ஒதுக்கீட்டில் தமிழ் மக்களுக்கான ஒதுக்கீடுகளை பெற வேண்டும் என்றால் உங்கள் வாக்குகளை செலுத்துவது அவசியமானது. இந்த நாட்டில் வாழும் நாம், தேர்தல் அரசியலில் ஒன்றிணைந்து பங்கு பற்றி, பிரான்சு நாட்டினதும் எமதும் எதிர்காலத்துக்கும் பலம் சேர்ப்பதோடு, எமது உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வோம்.

தகவல்: தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு
marie-george-buffet

Share This: