ஊழலுக்கு எதிராகவும் முதலமைச்சருக்கு ஆதரவாக இளைஞர் படை திரள்வு….மக்களுக்கு பயந்து ராணுவ பாதுகாப்புடன் உலாவும் தமிழரசு கட்சியினர்.

0
804

வடக்கு மாகாண முதலமைச்சர் தொடர்ந்தும் பதவியில் நீடிக்க வேண்டும் எனவும் முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை கைவிடப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியும் நேற்றைய தினம் சமூக வலைத்தளங்கள் ஊடாக திர ண்ட இளைஞர்கள் வடக்கு மாகாண சபையை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

தமிழரசுக் கட்சி தனது முயற்சியை கை விடாவிட்டால் இந்த முற்றுகைப் போராட்டம் தொடரும் என எச்சரித்துள்ள இளைஞர் படையணி, வடக்கின் எந்த இடங்களுக்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான விசாரணையை அடுத்து இரு அமைச்சர்களையும் தாமாகவே விலகுமாறும் ஏனைய இரு அமைச்சர்களையும் இரு மாத விடுமுறையில் நிற்குமாறும்,

வடக்கு மாகாண முதலமைச்சர் உத்தர விட்டதை தொடர்ந்து, முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து, அவரை பதவியிலிருந்து தூக்கியெறியும் முயற்சியில் தமிழரசுக் கட்சி ஈடுபட்டிருந்தது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து 15 பேரினது கையொப்பங்களுடன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தமிழரசுக் கட்சியின் சிவஞானம் கையளித்திருந்தார். அரசோடு இணைந்த தமிழரசுக் கட்சியின் இந்த முடிவுகளுக்கு, வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எதிர்ப்பு வலுப்பெற்று வரும் நிலையில்,

நேற் றைய தினம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஆதரவை திரட்டிய இளைஞர் படையணி ஒன்று, வடக்கு மாகாண சபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்டு முதலமைச்சருக்கு ஆதரவாகவும், தமிழரசுக் கட்சிக்கு எதிராகவும் குரல் எழுப்பியிருந்தனர். இதன் பின்னர் முதலமைச்சர் வாசஸ்தலத்திற்கு வருகை தந்த இளைஞர்கள் உங்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் என வீர முழக்கமிட்டனர்.

இதன்போது புன்னகையுடன் வெளியே வந்த முதலமைச்சர் ஆதரவாக குரல் எழுப்பி, போராடிய இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் போது இளைஞர்கள் ஆரவார குரல் எழுப்பி, எங்கள் தலைவர் விக்னேஸ்வரன் ஐயா என பூரிப்படைந்தனர். இளைஞர்களின் இந்த தன்னெழுச்சி அங்கு நின்றவர்களை பெரிதும் மெய் சிலிர்க்க வைத்தது.

தமது ஊழல், தேசியம் வாயால் மட்டும் கதைத்து கொண்டு அரசின் எடுபிடிகளாக திரிவது தமிழ் மக்களுக்கு தெட்ட தெளிவாக தெரிய வந்துள்ளதால் தமிழ் மக்களுக்கு பயந்து ராணுவ பாதுகாப்புடன் திரியும் தமிழரசு கட்சியினர் திரிவது மட்டு அல்லாது நேற்று மாலை முதல் தமிழரசு கட்சியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா அலுவலகங்களை சுற்றி சிங்கள ராணுவத்தினர் குமிக்கப்பட்டு பாது காப்பு வழங்கப்பட்டு வருகின்றது
IMG-20170616-WA0051IMG-20170616-WA0049IMG-20170616-WA0047IMG-20170616-WA0044IMG-20170616-WA0050IMG-20170616-WA0042IMG-20170616-WA0040IMG-20170616-WA0043

Share This: