விஜய் – அட்லீ இணையும் ‘மெர்சல்’

0
917

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்துக்கு ‘மெர்சல்’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு.

சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகளில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் விஜய்யுடன் சமந்தா, யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள்.

இதுவரை பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த படத்துக்கு ” என தலைப்பிட்டுள்ளது படக்குழு. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். மேலும், விஜய்யின் 2-வது லுக் அடங்கிய போஸ்டரை இரவு 12 மணிக்கு வெளியிடவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

‘மெர்சல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
‘மெர்சல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

3 கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் நடித்துள்ளார்கள். மேலும், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

காளைமாடு பின்னணியில் இருக்க கலக்கலான போஸ் கொடுத்துள்ளார் விஜய். படத்தின் பெயர் கூட மாட்டின் வால் போல டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய் காளையை அடக்கும் வீரராக நடித்திருக்கலாம்.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இது அவரது ரசிகர்களுக்க பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் படத்தை பெரும் பொருட்செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சென்னை, ராஜஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய்.

Share This: