தினமும் 15 நிமிடங்கள் – இலகுவாகவும் இலவசமாகவும் பிரெஞ்சு மொழியைக் கற்பதற்கான வழிமுறை !!

0
7628

‘தமிழனுக்கு என்று ஒரு நாடுமில்லை;தமிழன் இல்லதாத நாடும் இல்லை’ என்று சொல்லும் அளவிற்கு இன்று உலக நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.போரின் பிடியிலும் பொருளாதார நேருக்குவாரங்களிலும் இன்னல்களை அனுபவித்து வரும் தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் அந்தந்த வாழ்விட மொழிகளை கற்று கொள்ள முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் .

என்ன தான் திறமைகள் இருந்தாலும் தாம் வாழும் வாழ்விட மொழியை ஓரளவேனும் தெரிந்து கொள்ளாமல் வாழ்வது கடினமானது ஆகும். இதனாலே தங்களுக்கு கிடைக்கும்அ பல அரிய வாய்ப்புகளை தவற விட்டு விடுகின்றனர் . சட்ட திட்டங்கள் ,வசதி வாய்ப்புகள் ,அரச சலுகைகள் ,வேலைகள் என்று பன்முகப்பட்ட தேவைகளுக்கு மொழி அறிவு அவசியமாகின்றது .இதற்காக புலம்பெயர் நாடுகளில் வாழும் எம்மவர்கள் மொழிபெயர்ப்புக்கு என்றே ஒரு பெரும் தொகையை செலவிட வேண்டி வருகிறது .குறிப்பாக பிரான்சில் இது அதிகம் என்றும் சொல்ல முடியும் .உலகளாவிய ரீதியில் பிரஞ்சு மொழி ஆங்கிலத்துக்கு அடுத்தபடியான பயன்பாட்டு மொழியாக இருந்து வருகிறது .ஆகவே பிரெஞ்சு மொழியை கற்பது அனைவருக்குமே பயனுள்ளதாகும் .

Youtube வாயிலாக, தமிழ்மொழி மூலம் பிரெஞ்சு கற்பிக்கும் புதிய முயற்சி ஒன்றை, கிஷோர் ஆசிரியர் தொடக்கியுள்ளார். தினமும் குறைந்தது 15 நிமிடம் செலவிடுவதன் மூலம், மிகவும் இலகுவாக நீங்கள் பிரெஞ்சு மொழியைக் கற்க முடியும். பிரான்சில் வாழும் எல்லோருக்குமே பிரெஞ்சு முக்கியம் என்பதால், ஆசிரியரின் இந்த முயற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தாயகத்தில் இருந்து திருமணம் முடித்தோ அல்லது தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ பிரான்ஸ் வருபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும் .

அவருடைய Youtube Channel ஐ ‘சப்ஸ்கிறைப்’ செய்வதன் மூலம் நீங்கள் வீடியோக்களை உடனுக்குடன் பெற்று, உங்கள் படிப்பைத் தொடரலாம். கிஷோர் ஆசிரியர் பல வருட அனுபவமும் உரிய அரச அங்கிகாரமும்பெற்ற ஆசிரியர் என்பதும் குறிப்பிட தக்கது .நேரடியாகவும் அவரது கல்வி நிலையத்தை அணுகி பிரெஞ்சு மொழியினை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும் .இந்த அருமையான முயற்சியை மேற்கொண்டிருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்….!!

Share This: