விளையாட்டில் அரசியல், ஈழத்துச் சிறுமியின் எதிர்நீச்சல்.

0
815

ஈழத்துச் சிறுமியைக் கண்டு பயந்த இந்தியா.

ஈழத்துச்சிறுமி தனுஜாவின் சாதனையை பல தடவை பகிர்ந்த நாங்கள்! இந்த கொடுமையையும் நியாயம் கிடைக்கும்வரை பகிருங்கள்.

என்ன கொடுமை!!! ஈழத்துச் சிறுமி தனுஜாவின் திறமையைக் கண்டு 130 கோடி மக்கள் வாழும் இந்தியாவே மிரளுதென்றால் நம் ஈழத்தமிழரின் புகழ் தனுஜாவின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எமக்காக நேர்மையாகவும் போலியாகவும் போராடுபவர்களின் காதுகளிற்கு உறைக்கும்வரை பகிருவோம். இதுதான் ஈழ மக்கள் மீதான இந்திய அரசியல்!!!

விளையாட்டில் அரசியல், ஈழத்துச் சிறுமியின் எதிர்நீச்சல்.
20376176_1221456044666192_8154833405865445901_n-1

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி. உலகின் முன்னனி விளையாட்டுத் தொலைக்காட்சிகளில் ஒன்றான ஸ்டார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று சில வருடங்களுக்கு முன்னால் சொல்லியிருந்தால், வாய்விட்டுச் சிரித்திருப்போம். இந்தியாவின் கிரிக்கெட் கடவுளாக மதிக்கப்படும் சச்சின். தமிழக கபடி அணியின் உரிமையாளராக இருப்பார் என்றோ, உலக நாயகன் கமல்ஹாசன் தமிழக கபடி அணியின் தூதுவராக வருவார் என்றோ கூட நாம் கற்பனை செய்திருக்க மாட்டோம். ஆனால் அதெல்லாம் சாத்தியமாகிறதென்றால் கபடியில் ஊர் மெச்சும் நம் திறமையும் அதன் மீது நாம் கொண்டுள்ள அக்கறையும்தான் காரணம்.
20476043_1221456054666191_5790154946632368560_n

அதே நேரத்தில் திறமை இருந்தும் சில சில்லறைக் காரணங்களைக் கூறி தேசிய அளவிளான போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகத்தில் வாழ்ந்துவரும் ஈழத்துச் சிறுமிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. திருச்சியில் வசித்து வரும் இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஜெயக்குமாரின் மகள் தனுஜா என்பவரே அவ்வாறு மறுக்கப்பட்ட சிறுமியாகும்.

ஈழப்போரின் அவலத்தால் தமிழகத்திற்கு தஞ்சமாக வந்தது அந்தக் குடும்பம். மகள் தனுஜா கல்வியுடன் நீச்சலிலும் திறமைமிக்கவராக இருந்தார். ஓய்வு பெற்ற கடற்படை வீரர் பரமேஸ்வரனின் பயிற்சியில். அவளுக்கு நீச்சலின் நுட்பங்களுடன் பதக்கங்களும் கைவரப்பெற்றன.
20430024_1221456061332857_7758815566829229004_n

2016 ஆம் ஆண்டில் மட்டும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என 18 பதக்கங்களை தனுஜா வென்றார். தேசிய அளவிலான போட்டிகளில் 2 தங்கப்பதக்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அப்படிப்பட்ட தனுஜாவை சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வயது அதிகம் எனச் சொல்லி நிராகரித்தனர். தனுஜா பத்து வயது சிறுமியாக இருந்தும், 14 வயது பெண்ணுக்குரிய எழும்பு எடையைக் கொண்டிருப்பதாக டாக்டர் சீனிவாசன் கூறியதை அடுத்து இந்த அவலம்!!!

தனுஜாவை விடவும் எழும்பு நிறைகூடிய குழந்தைகளை அனுமதித்துள்ளதை சுட்டிக்காட்டியபோதும் பயனில்லை. அதன்பின், வயது வரம்பில்லாத தேசிய நீச்சல் போட்டியொன்றில் கலந்து கொள்ள பள்ளியிலிருந்து பெயர் கொடுத்தபோது, இந்தியக் குடிமகளுக்கு மட்டுமே அனுமதி என முகத்தில் அறைந்தாற்போல் கூறி தனுஜாவிற்கு அனுமதி மறுத்துவிட்டனர்.

“நீச்சல் போட்டிகளில் சாதனை புரியவேண்டுமென்பதுதான் எனது லட்சியம்” என்கிற தனுஜாவின் கண்களில் ஏமாற்றமே பிரதிபலித்துக் கொண்டுள்ளது.
20431344_1221456181332845_8380766247564017044_n

“நான் கார்பென்டர் வேலைக்கு போறவன். அதில் வரும் பணத்தை வைத்தே தனுஜாவை, கோச்சர் பரமேஸ்வரனிடம் அனுப்பினேன். என் குழந்தையின் திறமையையும், எங்களோட நிலையையும் பார்த்து அவர் பணமே கேக்கல. தேசியளவில் முன்னேறின குழந்தையை நிராகரித்து அவளோட கனவுகளை முறிச்சிட்டாங்க. மதுரை கோர்ட்டில் வழக்கு தொடுத்திருக்கேன்” என்கிறார் தனுஜாவின் தந்தை ஜெயக்குமார்.

தனுஜா நிராகரிக்கப்பட்ட நீச்சல் போட்டிக்கான தமிழக செயலாளரான ஜெயராமன், “நாங்கள் அந்த குழந்தையை ஏற்றுக்கொண்டாலும், தேசிய அளவில் அனுமதிக்கமாட்டார்கள். பிற நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தால், இங்குள்ள குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். இது அசோஷியேசன் எடுத்த முடிவு” என்கிறார்.
20476264_1221456057999524_4823267926356307161_n

குழந்தைகள் உரிமைகள் தொடர்பாக, இந்தியா உலக நாடுகளுடன் ஏற்படுத்திக்கொன்ட உடன்படிக்கையின்படி, “இந்தியக் குழந்தைகளுக்கு உள்ள அனைத்து உரிமைகளும், அகதிகளாக வந்தவர்களுக்கும் உண்டு” எனக் கூகிறது. “தனுஜாவை நீச்சல் போட்டியில் பங்கேற்கவிடாமல் தடுப்பவர்கள், இந்தியாவின் இந்த உடன்படிக்கையை அறியவில்லையா?” என்கிறார்கள் விளையாட்டு ஆர்வலர்கள்.

-அ. அருண்பாண்டியன்

இந்த ஈழத்துச் சிறுமியான தனுஜா ஐரோப்பிய நாட்டிலோ அல்லது அமெரிக்காவிலோ பத்து வருடத்துக்கு முன் போய் இந்தச் சாதனையை செய்திருந்தால் அவரின் எப்படி நிலமை மாறியிருக்கும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தொப்புள் கொடி உறவுகளே முதலில் ஈழத்து மக்களின் இந்த உரிமையை மீட்டுத் தர போராடுங்கள்!!!!

Share This: