சீனாவில் இடம்பெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற சுவிஸ் ஈழத்தமிழர்கள்.

0
1261

சீனாவின் ஷங்காய் மா நகரில் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் இதோசுரியூ உலகக் கராத்தேச் சுற்றுப் போட்டியில் முதற்தடவையாக சுவிஸைப் பிரதி நிதித்துவப்படுத்தி எமது ஈழத்து இளந்தலைமுறையினர் அறுவர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு வெற்றியீட்டியுள்ளனர்.

குறித்த போட்டி கடந்த 18, 19, 20 ஆகிய தினங்களில் இடம்பெற்றுள்ளதுடன், ஏறத்தாழ 25 நாடுகள் கலந்து கொண்டன.
உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேசப் போட்டிகளில் எங்கள் பதிவுகளை அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும்.
அந்த வகையில், சுவிஸ் நாட்டிலிருந்து சுவிஸைப் பிரதி நிதித்துவப்படுத்தி எமது ஈழத்து இளந்தலைமுறைனர் அறுவர் கொண்ட குழுவினர் முதற்தடவையாக இப்போட்டிகளில் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடி பதக்கங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளனர்.

அத்துடன், உலக நாடுகளின் சர்வதேச‌ கராத்தேப் பயிற்சிப் பட்டறையிலும் பங்குபற்றி சிறப்புப்பயிற்சிகளும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
FB_IMG_1503559082819

மேலும் சென்செய் வி.கெளரிதாசன் அவர்களுக்கு ஜப்பான் நாட்டிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட உயர் கறுப்புப்பட்டி ஐந்தாவது நிலைச் சான்றிதழும் கொண்டு வரப்பட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த போட்டில் கலந்து கொண்டோர்கள் தொடர்பில் மேலும் தெரியவருவதாது,

1.விபுலாந்தன் கெளரிதாசன் – தலைமைப் பயிற்சி ஆசிரியர்

2.கெளரிதாசன் ஸப்தேஷ்ணா – சூரிச்
ஸ்ரீபாலன் நிஷாலினி – லுட்சேர்ன்

3.தெய்வேந்திரம் பகீரதன் – சூரிச்

4.கெளரிதாஸன் ஷ்வப்தேஷ் – சூரிச்

5.வாமதேவன் விதுன் – சூரிச்

6.பாஸ்கரன் மெளனிஷன் – ஷப்கவுசன்.

வெற்றியீட்டி சாதனை படைத்தோர்:
கெளரிதாசன் ஸப்தேஷ்ணா – (18 – 20 பெண்கள் பிரிவு) – இரு வெண்கலப் பதக்கங்கள் – காட்டா / குமிற்றே

ஸ்ரீபாலன் நிஷாலினி – (11 – 12 பெண்கள் பிரிவு) – வெண்கலப் பதக்கம் – காட்டா

கெளரிதாஸன் ஷ்வப்தேஷ் – (17 வயது ஆண்கள் பிரிவு) – சிறந்த எட்டு – காட்டா

வாமதேவன் விதுன் – (18 – 20 ஆண்கள்) – சிறந்த எட்டு – காட்டா
FB_IMG_1503559084942

இதேவேளை, லுற்றன் தமிழ் மன்ற தலைவர் தர்மபால மற்றும் லுற்றன் தமிழ் மன்றத்தின் கல்விக்கு பொறுப்பான ஆசிரியர் நா.ரஞ்சன், நிர்வாகத்தினர் சூரிச் விமான‌ நிலையத்தில் வெற்றியீட்டி நாடு திரும்பிய கராத்தே வீரர்களுக்கு பூங்கொத்து வழங்கி கோலாகல வரவேற்பு வழங்கப்பட்டது.
FB_IMG_1503559087912

2021 இல் டென்மார்க் நாட்டில் இடம்பெற இருக்கும் இதோசுரியூ உலகக் கராத்தேச் சுற்றுப் போட்டிகளில் இன்னும் அதிகமான‌ போட்டியாளர்கள் சுவிஸ் நாட்டில் இருந்து பங்குபற்றுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Share This: