சுவிசில் நாம் தமிழர் கட்சி உதயம் – (காணொளி இணைப்பு)

0
1218

நாம் தமிழர் கட்சியின் சுவிஸ் தொடக்க விழாவும், தியாக தீபம் திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் செப்டெம்பர் 26 ஆம் திகதி மாலை பேர்ண்-பொல்லிகன் நகரில் நடைபெற்றது. ஊடகவியலாளர் இரா தர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்ட ஆலோசகர் மார்க்கண்டு தேவராஜா, வர்த்தகர் தம்பிராசா கௌரிநாதன் ஆகியோர் விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர். தொடர்ந்து மாவீரரின் தந்தை மார்க்கண்டு புலிக்கொடியை ஏற்றி வைக்க, நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறைச் செயலாளரும் திரைப்பட இயக்குநருமான ஜெகதீசப்பாண்டியன் கட்சிக் கொடியை ஏற்றினார்.

மௌன அஞ்சலியைத் தொடர்ந்து கொள்கை முழக்கத்தை மேற்கொண்ட ஜெகதீசப்பாண்டியன் உறுதிமொழி முழக்கத்தை நடாத்தி வைத்தார். நாம் தமிழர் கட்சியின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் விஸ்வலிங்கம் இளங்கோ திலீபனின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்க, வாத்தியக் கலைஞர் மயில், சமூக ஆர்வலர் பொன் சந்திரன் ஆகியோர் தீபம் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து சபையோரின் மலரஞ்சலியுடன் உரைகள் இடம்பெற்றன. தமிழகத்தில் இருந்து வழக்கறிஞர் இராசீவ் காந்தி, முனைவர் சுபாஸ் சந்திரா, இளந்தமிழர் புகழேந்திமாறன் ஆகியோர் உட்படப் பலர் நிகழ்வில் விருந்தினர்களாகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share This: