எமது தார்மீக போராட்டத்தை ஐநா அங்கிகரிக்குமா.? “முதலாளித்துவம்” எம்மை ஏற்குமா.?

0
883

சமீபத்தில்தான் ஜெனீவாவில் ஒன்றுகூடி சர்வதேசத்தின் முன் எமது மனக்குமுறலைக் கொட்டியும், சிங்களத்திற்கு எதிராக “கம்பு சுத்தியும்” இந்த வருடத்திற்கான “ஐநா போராட்டத்தை” இனிதே நிறைவு செய்திருந்தோம்.

எமது குரலை சர்வதேசம் செவிமடுக்குமா.? அல்லது, அது எமக்காகக் குரல் கொடுக்குமா.? ஐநா என்றால் யார்.? அதன் பின்னணி என்ன.? அதன் கொள்கைகள் யாருக்காக வகுக்கப்படுகின்றன.? போன்ற கேள்விகள், எம்மத்தியில் எப்போதும் எழுந்ததில்லை என்பது தான் வேதனையே.!

இறுதி யுத்தத்தின் போது, குழந்தைகள் தொடங்கி முதியோர் வரை, பல லட்சம் மக்கள், தாம் வாழும் நாடுகளின் தலைநகரில் கூடி, கண்ணீருடன் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டிய போதும், யாரும் எம்மைக் கண்டு கொள்ளவில்லை.

அந்த நேரத்தில் அந்த, அந்த நாடுகளின் ஊடகங்கள் சொல்லி வைத்தாற்போல, அந்தச் செய்திகளை இருட்டடிப்பு செய்தன. இப்போது அவர்களிடமே திரும்பவும் நீதி கேட்டுப் போய் நிற்கின்றோம்.

ஏன் எம்மை ஒதுக்கினார்கள்.? இது எப்படி சாத்தியமாகியது.? இதன் பின்னால் யார் உள்ளனர்.? எதற்காக எங்கள் போராட்டமும், எங்கள் உணர்வுகளும் நசுக்கப்பட்டது.? அதற்கான விடையை இந்தப்பதிவின் ஊடாக நாம் தேடுவோம்.!

சமீப காலமாக “இலுமினாட்டி” என்ற சொற்பதம் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி வெளிக்கிளம்புவதை நாம் காணலாம். அப்படியொன்று இருக்கின்றதா அல்லது இல்லையா என்பதை, நான் இங்கு ஆராயவில்லை. மாறாக இந்த உலக ஒழுங்கு பற்றி நாம் வரலாற்றின் மூலம் தேடுவோம்.

1118ம் ஆண்டு ஐரோப்பிய மத குருக்கள் ஜெருசலேம் மீது போர் தொடுத்தனர். அந்தப் போரில் பங்குபற்றிய ஒரு பிரிவான “பிரீமேஷன்” என்ற பிரிவினரே ரெம்பிளஸ் (templas) என்று அழைக்கப்பட்டனர். அந்த யுத்தத்தில் கிடைத்த பொக்கிஷத்தின் மூலம் (அது மன்னர் சாலமனின் நுண்கலைப் புத்தகம் என்கின்றனர்) இந்த அமைப்பினர் பெரும் செல்வந்தராகினர் என்றும் வரலாறு கூறுகின்றது.

அன்றைய நேரத்தில் இந்த அமைப்பினர் பிரான்சில் குடியிருந்தனர். இவர்கள் பெரும்பாலும் மக்களின் செல்வத்தை சுரண்டுவதாகக் குற்றம் சாட்டி, பிரான்ஸ் அரசு இவர்களைத் தடை செய்தது. அதனால் இந்த அமைப்பினர் 1730ம் ஆண்டு பிரான்சிலிருந்து, ஸ்கொட்லாந்துக்குத் தப்பிச்சென்றனர்.

அங்கு வைத்துத்தான் இவர்கள் “பிரீமேஷன்” அமைப்பை உருவாக்கினர். பின்னர் அங்கிருந்து அந்த அமைப்பைச் சேந்தவர்கள் அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தனர். பெரும்பாலும் அங்கு குடியேறியவர்கள் ஐரிஸ், மற்றும் ஸ்கொட்டிசினரே அதிகம்.

சமகாலத்தில் “அடம் வெய்ஸப்ட்” என்ற யூதர் “பிரமிடுவில் ஒற்றைக்கண்ணை” இலச்சினையாகக் கொண்ட “இலுமினாட்டி” என்ற அமைப்பை 01/05/1776ம் ஆண்டு ஆரம்பித்தார். பின்னர் அவர் கத்தோலிக்க மதத்தை தழுவியதால் “ரொத்சைல்ட்” அதை பொறுப்பேற்றதாகவே இந்த வரலாறு நீள்கிறது.

1738-1790ம் ஆண்டில் இவர்களின் சுரண்டல்களுக்கு எதிராக, “வத்திக்கான்” இறுக்கமான முடிவின் மூலம், இந்த அமைப்பைத் தடை செய்தனர். அதன் தொடர்ச்சியாக எல்லா நாடுகளும் இந்த அமைப்பின் மீதான தடையை இறுக்கியதால், தங்கள் அடையாளத்தை அகற்றினர் அல்லது மறைத்து வாழ்ந்தனர்.

இந்த நேரத்தில் அமெரிக்காவில் உள்நாட்டுப்போர் தலைவிரித்தாடியது. இந்தக் கலகங்களை அடக்கி, நிலையான ஒரு கட்டமைப்பை அங்கு ” பிரீமேஷன்” அமைப்பினரே உருவாக்கி, தமக்கான நாடாக அமெரிக்காவை கட்டியெழுப்பினர்.

அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜோர்ச் வொஷிங்டனும் அவரது தளபதிகளும் ” பிரீமேஷன்” சடங்குகள் செய்த பின்னரே பதவியேற்றனர் என்பதே வரலாறு. அதன் பின்னர் வந்த அதிபர்கள் அனைவருமே (ஒபாமாவைத் தவிர) ” பிரீமேஷன்” குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

“இலுமினாட்டி” என்று அழைக்கப்படும் “பிரீமேஷன்” அமைப்பினரில் பதின் மூன்று குடும்பங்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
FB_IMG_1507184066653

நண்பர்களே.! உங்களுக்கு நம்ப முடியாமல் போனாலும், இந்த 13குடும்பங்களிடம்தான், இந்த உலகத்தின் மொத்த பொருளாதாரத்தில் 90% பங்கு இவர்களிடமே உள்ளது.! மிகுதி 10% தான் இந்தப் பூமியில் வாழும் மக்களிடம் உள்ளது.!

இந்த உலகின் பெரும் செல்வங்களை ஈட்டும், எந்த வியாபாரமும் இவர்களிடமே உள்ளது. இவர்கள்தான் நாம் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும், எந்த நோய் எமக்கு வரவேண்டும் என்பதில் தொடங்கி எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றனர்.

இந்த 13குடும்பங்களின் கட்டுப்பாட்டில்தான் அமெரிக்காவே உள்ளது. அதற்கு ஆதாரம் அமெரிக்க கொடியின் பதின்மூன்று கோடுகள், இந்தப் பதின்மூன்று குடும்பங்களைக் குறிக்கின்றதாம். கொடியில் உள்ள கழுகின் கையில் 13அம்புகள், கழுகின் வாலில் 13இறகுகள், ஒலிவ் இலையில் 13 இலைகள் இப்படி அதில் உள்ள அனைத்துமே 13இல் தான் இருக்கும்.

அதே போலவேதான் அவர்களின் நாணயத்தில், “பிரீமேஷன்” ஒற்றைக்கண் பிராமுடுவையும் வைத்தனர். ஆக, அமெரிக்காவின் அதிகாரமே “பிரீமேஷன்” அமைப்பை சேர்ந்தவர்களிடமே உள்ளது.

அமெரிக்காவின் மத்திய வங்கியான “பிடரல் பாங்” 1913இல் ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை, ஜெர்மனில் தங்கள் வட்டித் தொழிலை ஆரம்பித்து, பின் அதை வங்கிகளாக மாற்றி இன்று உலகம் முழுவதுமுள்ள வங்கிகளைக் கையாளும் “ரொத்சைல்ட்”குடும்பத்திடமே உள்ளது.

இந்த வங்கி இன்று வரை அமெரிக்க அரசுக்கு, வட்டிக்கு கடன் கொடுப்பதை உங்களால் நம்ப முடிகின்றதா.? உலகின் முதல்தர வல்லசு நாட்டில், அந்த நாட்டின் “தாய் வாங்கி” தனியாருக்கு சொந்தமானதென்றால் அந்த நாட்டை இயக்குவது யார்.?

1963இல் இந்த நடை முறையை மாற்றி மத்திய வங்கியை அமெரிக்க பாராளமன்றத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சியில் ஜான் எப் கெனடி (இவரும் “ரொத்சைல்ட்” குடும்பத்தை சேர்ந்தவர் தான்) ஈடுபட்டார். அந்த முயற்சியின் போது தான் அவர் “2.2mm துப்பாக்கி” சூட்டின் மூலம் கொல்லப்பட்டார்.

இன்றுவரை மர்மமாக உள்ள, இந்தக்கொலையின் பின் “எந்தொரு அதிபரும்” மத்திய வங்கியை பாராளமன்றத்தின் கீழ் கொண்டுவர முயற்சி செய்யவில்லை.

உலகின் 90%செல்வதை தம்மகத்தே கொண்டுள்ள, இந்த 13குடும்பங்களின் கட்டுப்பாட்டில் தான், உலகின் பல அரசுகள், ஊடகங்கள், திரைப்படங்கள், இசைத்துறை, தொழில் நிறுவனங்கள் தொடங்கி சமூக ஊடகங்கள் வரை இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தே இயங்குகின்றன.
FB_IMG_1507184063813

யாரை பிரபல்யமாக்க வேண்டும், யாரை வீழ்த்த வேண்டும் என்பதையும் இவர்களே தீர்மானிக்கின்றனர். அதற்கு சரியான உதாரணம் மைக்கல் ஜாக்சனும், புதிய அதிபர் ட்ரம்பும் தான்.

இவர்களின் தாரக மந்திரம் “எந்த நாட்டையும் யாரும் ஆளலாம், ஆட்டுவிப்பவர்கள் தாங்களாக இருக்கவேண்டும் என்பதே இவர்களின் கொள்கை.

சரி இவர்களுக்கும் ஐநாவிற்கும் என்ன சம்பந்தம்.??

அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையை, முதன் முதலில் ஆரம்பித்தவர்கள் இந்த 13குடும்பத்தைச் சேர்ந்த “ரொக்ஃபெல்லர்” குடும்பத்தினராகும். இந்த வெளியிறவுக்கொள்கையில் ஈடுபடுபவர்கள் இந்தக்குடும்பத்தை சேர்ந்தவர்களும், பெரும் வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுமே இருக்கின்றனர்.

இவர்களின் நோக்கம் ஒன்றுதான். வெளியுறவுக்கொள்கையை “இரகசிய முதலாளிகளுக்கு” ஏற்றால் போல வகுப்பதேயாகும். இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவேதான் “ரொக்ஃபெல்லர்” குடும்பத்தினரே ஐநா சபையை உருவாக்கினர்.

ஐநா சபைக்கட்டிடத்திற்கான நிலத்தினை “ரொக்ஃபெல்லர்” குடும்பத்தினரே வழங்கியிருந்தனர்.!

ஐநா சபையின் முதல் உறுப்பினர்கள் அன்றைய “ரொக்ஃபெல்லர்” குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட வெளியுறவுத்துறையைச் சேர்ந்த 74உறுப்பினர்களுமேயாகும். இன்றும் அதில் அங்கம் வகிப்பவர்களை இவர்களே உருவாக்கி தங்கள் கைப்பாவையாகவே பாவிக்கின்றனர்.

அமெரிக்காவின் டென்வர் விமானநிலையத்தின் கீழ் இவர்களுக்கான செயலகம் ஒன்று இயங்குவதாகவும் கூறப்படுகின்றது. திடீரென்று அந்த விமானநிலையம் பழுதடைந்து விட்டதாகக் கூறி புனரமைக்கப்பட்டது. புனரமைப்பிற்கான கால எல்லையைத்தாண்டி, மேலும் இரண்டு வருடங்களும், 4பில்லியன் டொலர் பணமும் செலவாகியதாக கணக்கு காட்டியதும் சந்தேகத்தை வரவைத்து விவாதிக்கப்பட்டது.
FB_IMG_1507184069978

இந்த “இலுமினாட்டி” என்பது எவ்வளவு தூரம் உண்மையோ தெரியவில்லை.? ஆனால், இந்த உலகத்தின் பொருளாதார ஒழுங்கை, இந்த 13குடும்பங்களுமே தீர்மானிக்கின்றனர் என்பதே எனது நம்பிக்கை.!

இவர்களுக்கு, உலக மக்களிடமோ அல்லது நாடுகளிடமோ எந்தவித கரிசனையும் கிடையாது. தங்களுக்கு ஏற்றால் போல அதை ஒழுங்கமைக்கும் பணியையே இப்போதும் மட்டுமல்ல எப்போதுமே செய்யப் போகினறனர்.

சில இலட்சம் மக்கள் தொகையைக்கொண்ட ஈழத்தமிழர் போராட்டம் என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் பார்ப்பது “தாங்கள் உதவ நினைப்பவர்களால், தங்களுக்கு என்ன லாபம்” என்பது மட்டுமேயாகும்.!

தங்களுக்குத் தேவைப்படும் வரைக்கும் வைத்திருப்பார்கள், தேவை இல்லாத நிலை வரும் போது அழித்து விடுவார்கள். அதற்கு பின்லேடன் தொடங்கி சதாம் குசைன், கடாபி வரைக்கும் இது தான் வரலாறு.

இவர்களின் “கையாள்க்கையை” புரிந்ததாலோ என்னவோதான் தலைவர், யாரிடமும் தங்கி இருக்காது “எங்களின் மக்களின் உதவியுடன்” மட்டுமே போராட்டத்தை முன்னெடுத்தார்.!

இதில் இன்னொரு பாடத்தை நாம் கற்க வேண்டும். பாபர் மசூதி தகர்ப்பின் பின் ஆயிரக்கணக்கான மக்களின் மரணத்தை காரணம் காட்டி, தம்மை நிஜாயவான்களாக நிலைநிறுத்துவதற்காக, இந்தியப் பிரதமர் மோடியின் அப்போதைய பயணத்திற்கு தடைப்போட்டிருந்தது அமெரிக்கா.

மோடி தேர்தலில் போட்டியிட்ட போது, இவர்கள் காங்கிரஸை வெற்றி பெறவைக்க போராடித் தோற்றனர். மோடி வெற்றி பெற்றதும், பயணத்தடையை நீக்கி மோடிக்கு செங்கம்பள வரவேற்பைக் கொடுத்து குத்துக்கரணம் அடித்தது அமெரிக்கா. (மோடி இப்போது இவர்களின் கையாள் என்பது வேறு விடயம்)

இதிலிருந்து நாம் கற்கும் பாடம் “நாம் பலமாக” இருந்தால், இவர்கள் எங்கள் வீட்டு வாசலுக்குத் தேடி வருவார்கள். இல்லது போனால் எம்மை யாரும் கண்டு கொள்ளப்போவதில்லை !

“தமிழர்கள்” சில லட்சங்கள் என்பதைத் தாண்டி, கோடிகளில் எங்களின் தொகையை… இந்த உலகத்திற்கு நாம் காட்ட வேண்டும்.!

அதற்காக உலகத்தமிழர் அனைவரும், ஈழத்தமிழர் நாம் எவ்வாறு “தமிழர்” என்ற அடையாளத்துடன் இணைந்தது போல, தமிழகத்தமிழர்களும் “திராவிடம் என்ற மாயையிலிருந்து” வெளிவந்து “தமிழர்” என்ற அடையாளத்துடன் ஒரே நேர்கோட்டில் இணையவேண்டும்.

தமிழர்கள் ஒன்றுபட்டு பலம் பெறாதவரை ஒவ்வொரு வருடமும் ஐநா முன்றலில் “இலவு காத்த கிளியாக” இருக்க வேண்டும்.! அல்லது பொழுது போகாமல், “ஐநா வாசலில் கம்பெடுத்து சுத்த” வேண்டிய நிலை தான் வரும்.!

நண்பர்களே.! நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விகளுக்கான விடையை, இந்தப்பதிவினுள்ளேயே தேடுங்கள். இளையதலைமுறை இன்னும் வீரியமாக, அரசியல் ராஜதந்திரத் தெளிவுடன், ஒரே நேர்கோட்டில் நீங்கள் அணிவகுக்க வேண்டும். இளம் தலைமுறை அணி வகுக்குமா.? போராடுமா.??

கேள்விக்குறியுடன்…
-ஈழத்து துரோணர்

Share This: