தமிழீழ விடுதலைக்காக கூவிய மூத்த அரசியல் குயில் ஐயா ஈழவேந்தன்.

0
1201

தமிழீழ விடுதலைக்காக கூவிய மூத்த அரசியல் குயில்… சிங்கள நாடாளுமன்றத்தில் ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை  ஆள நினைப்பதில் என்ன குறை என முழங்கிய இனமான புலிகளின் குரல்…

அது ஐயா ஈழவேந்தனின் குரல்…!
அவருக்கு….. மதிப்பளிக்கப்படுகிறது…

‘தமிழேந்தல்’ ஐயா ஈழவேந்தன் அவர்கள் 65 ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்கும் தமிழீழ விடுதலைக்கும் ஆற்றிய பணிக்காக அவருக்கு மதிப்பளிப்பு நிகழ்ச்சி ஒன்றைத் தமிழ்த் தாய் மன்றம் அக்ரோபர் மாதம் 7ம் நாள் மாலை 5:30 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வு முற்று முழுதாக திரு ஈழவேந்தன் அவர்களின் நீண்ட நெடிய பணியில் பெற்ற பட்டறிவையும் வரலாற்றுத் தகவல்களையும் மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் களமாகவும் அவரது எண்ணங்களை ஆவணப்படுத்தும் நோக்கம் கொண்டதாகவும் அமையும். அவரது ஈகம் நிறைந்த தமிழீழ விடுதலை பணியையும், தமிழ்த்தொண்டையும் யாவரும் கூடி வாழ்த்துவோம் போற்றுவோம் வாரீர்!

வாழ்க தமிழ்!
வளர்க தமிழத்தேசிய உணர்வு!
இடம் : கனடா செல்வச் சந்நிதி ஆலய மண்டபம்
1 Golden Gate Ct, Scarborough, ON M1P 3A4,

ஒளிப்படத்தில் தலைவர் பிரபாகரன் உடன் ஐயா ஈழவேந்தன்
ஒளிப்படத்தில் தலைவர் பிரபாகரன் உடன் ஐயா ஈழவேந்தன்

Share This: