ஈழத்தமிழ் மாணவரை கௌரவப்படுத்திய பிரித்தானிய பிரதமர்.

0
2425

பிரித்தானியா மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கற்கும் ஈழத் தமிழ் மாணவர் ஒருவர் பிரித்தானிய பிரதமரினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வளரும் நாடுகளுக்கு உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காக தனது சொந்த செலவில் தொண்டு நிறுவனத்தை உருவாக்கியமைக்காகவே அந்த மாணவர் கௌரவிக்கப்பட்டுள்ளார். முழுநேர மருத்துவ பட்டப்படிப்பைத் தொடரும் 24 வயதான ராதவன் குணரட்ணராஜா என்ற இளைஞர், Little Things என்ற பெயரில் தனது தொண்டு நிறுவனத்தை இயக்கி வருகிறார்.
1920_dsc03790

தன்சானியாவில் ஒரு மருத்துவமனையில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தவர், மற்ற நாடுகளில் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார்.

குறித்த மாணவனின் தொண்டு மற்றும் நிதி திரட்டும் அமைப்பின் பணி பிரித்தானிய பிரதமர் தெரசா மே மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
800_img_8200

அதற்கமைய தன்னார்வமாக பணிபுரியும் மக்களுக்கு வழங்கப்படும் பிரித்தானியாவின் 787வது Point of Light விருதும் அந்த மாணவருக்கு, பிரித்தானிய பிரதமரால் வழங்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டில் Little Things தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்ததிலிருந்து ராதவன் மூன்று சுகாதார திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
FB_IMG_1507302951568

இந்த திட்டங்களுக்கு அவசியமான 95,000 பவுண்ட் நிதி சேகரிப்பதற்காக பிரித்தானிய முழுவதும் உள்ள தன்னார்வ மாணவர்கள் உதவியுள்ளனர். இந்த தொண்டு நிறுவனத்திற்காக நிறுவனங்கள், பாடசாலை மற்றும் உள்ளூர் சமூகத்தினரின் ஆதரவுகள் பெற்று வரப்படுகின்றது.

கடந்த 2015ஆம் ஆண்டு அவரது முதல் திட்டமாக தன்சானியாவிலுள்ள கண் மருத்துவமனைக்கு உதவிகளை மேற்கொண்டிருந்தார்.

அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு இலங்கை கிளிநொச்சி குழந்தை மருத்துவமனைக்கு உதவிகளை வழங்கியிருந்தார். தெல்லிப்பழை மருத்துவமனைக்கும் அவரது இரண்டாவது திட்டத்தின் ஊடாக உதவப்பட்டது.
FB_IMG_1507302967177

தற்போது அவர் நேபாளத்தில் உள்ள Tamakoshi மருத்துவமனைக்கு உதவுவதற்காக 50000 பவுண்ட் நிதி சேகரித்து வருகின்றார்.

பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் ராதவனுக்கு பிரதமரின் விருது மேலும் ஊக்கப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தனது தனிப்பட்ட சாதனை அல்ல எனவும் தனக்கு பின்னால் உதவுவதற்கு தன்னார்வமாக பலர் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
FB_IMG_1507302958662

இதேவேளை, ராதவனுக்கு ஒரு தனிப்பட்ட கடிதம் அனுப்பிய பிரதமர் தெரசா மே, உங்கள் வேலை ஆயிரக்கணக்கான மக்களுக்கு முக்கிய மருத்துவ உபகரணங்களை வழங்கப்படுவதோடு, உலகெங்கிலும் உள்ள சமூகங்களில் உண்மையான வித்தியாசத்தை உருவாக்குகிறது. உங்கள் உறுதிப்பாடு மிகவும் பாராட்டுக்குரியது, அதற்காக மற்றவர்களிடம் நீங்கள் ஊக்கப்படுத்தியதைப் பற்றி நீங்கள் பெருமிதம் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
FB_IMG_1507302975180
800_img_7869
800_img_7819
800_img_7815
800_img_7264
800_dsc051711
800_rathusletter

Share This: