கடற்புலிகளின் ஆரம்பகால நீச்சல் பயிற்சி ஆசான் அன்னலிங்கம் மாமா இன்று நம்மைவிட்டுப் பிரிந்தார்.

0
13775

கடற்புலிகள் உருவாக்கத்தின்போது போராளிகளுக்கான நீச்சல் பயிற்சி ஆசானாக இருந்த அன்னலிங்கம் மாமா அவர்கள் இன்று விபத்தொன்றில் சாவடைந்துள்ளார்.

தமிழீழ தேசியத்தலைவரின் நன்மதிப்பைப் பெற்றிருந்தவரும்,1992 இல். கடற்புலிகள் உருவாக்கத்தின்போது போராளிகளுக்கான நீச்சல் பயிற்சி ஆசானாகவும், படகோட்டி பயிற்றுவிப்பாளராகவும் மற்றும் பல நீரடி நீச்சல் வீரர்களை உருவாக்கியவரும் போராளிகளால் அன்பாக மாமா என அழைக்கப்பட்டு வந்தவரும் ஆவார்.

குறிப்பாக இவருடைய மகன் கடற்புலிகளின் பொறுப்பாளர்களில் ஒருவராகவும் அதேவேளை இவருடைய உடன்பிறந்த சகோதரி லண்டனில் தாயகத்து தேசியச் செயற்பாடுகளுக்குள் முன்னின்று உழைத்துவரும் திருமதி இரத்தினேஸ்வரி அம்மா என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்னலிங்கம் மாமாவின் இழப்பில் துயருறும் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கெடுப்பதோடு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
IMG_20171012_143116

Share This: