யாழ்ப்பாணத்தின் பூர்வீக குடிமக்கள் இசுலாமியர்களாம்???? இது புதியகதை!!!!

0
1387

மேற்கண்ட காணொளியில் யாழ்ப்பாணத்தில் இருந்து வரலாறு தெரியாத ஒரு இசுலாமியர் நிறைய புதுக் கதைகளை அவிழ்த்து விட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை 8ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழர்கள் அல்லாத இசுலாமியர்கள் மட்டுமே ஆண்டு வந்ததாகவும், யாழ்ப்பாணம் இசுலாமியர்களின் பூர்வீக மண் என்றும் புலம்பித் தள்ளுகிறார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்தியாவில் இருந்து, வந்தேறு குடியாக யாழ்ப்பாணம் வந்து இசுலாமியர்களுடன் சண்டை போடமுடியாமல் பண்றியை வெட்டிக் கொன்று போட்டு இசுலாமியர்கள் அனைவரையும் துரத்தியதாகவும் இன்னும் பல இல்லாத பொய் வரலாறுகளை மேற்குறிப்பிட்ட காணொளியில் சம்மந்தமே இல்லாமல் உளறுகிறார்.

இது வேண்டுமென்றே திரிபுபடுத்தப்படும் ஒரு யுக்தி. நாம் எதையும் ஆதாரங்களோடு ஆவணப்படுத்தத் தவறினால்… தேசியத்தலைவர் அவர்கள் அசுரகுலத்தின் தலைவராகவும், மகிந்த மற்றும் ராகுல்காந்தி ராம அவதாரங்களாக சித்தரித்து எதிர்காலத்தில் நம் குழந்தைகளையே படிக்க வைப்பார்கள்!!!

தகுந்த ஆதாரங்களோடு நாம், நம் வரலாற்றை… நம் எதிர்கால சந்ததியினருக்கு வழங்கவேண்டும்.. இல்லையேல் நம் வரலாறு இவர்களைப் போன்ற பிரிவினைவாதிகளால் எம் கண்முன்னே மூடி மறைக்கப்படும்.!!! ஆகவே, இனத்தால் ஒன்றுபட்ட தமிழர்கள் அனைவரும் மிகவும் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

நாம் தமிழர்
சுவிட்சர்லாந்து.

Share This: