18 வருடங்களின் பின் தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை!

0
724

18 வருடங்களாக எந்தவொரு வழக்கும் தாக்கல் செய்யப்படாது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் கைதி ஒருவரை நேற்று(26)  கொழும்பு மேல் நீதிமன்றம்விடுதலை செய்துள்ளது.

கனகரட்ணம் ஜீவரட்ணம் எனும் அரசியற் கைதியே வழக்குத் தொடரப்படாத நிலையில் குற்றவாளியில்லையென நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இவரது வழக்கு ஆரம்பத்தில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

ஜீவரட்ணம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ரட்ணவேல் முன்னிலையாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  குறித்த வழக்கை விசாரணை செய்துவந்த கொழும்பு மேல் நீதிமன்றம், குறித்த அரசியல் கைதி குற்றவாளி இல்லை என தீர்ப்பளித்து சற்றுமுன்னர் விடுதலை செய்தது.

Share This: