மாவீரர் நாள் நினைவு கூறப்படுவதை ஏன் சிங்களம் தடுக்கவில்லை?

0
5196

‘மாவீரர் நாள் நினைவு கூறப்படுவதை ஏன் சிங்களம் தடுக்கவில்லை?’ என்பதற்கு ‘தடுத்தால் மறு பேச்சுக்கு இடமின்றி அடி விழும்’ என்று கடந்த வாரமே பதிவு செய்தோம்.. சிலர் அதை நம்பவில்லை.

இப்போது சொல்லுங்கள்.. தடுத்தால் அடி விழுந்திருக்குமா? இல்லையா?

சிங்களத்தை அனைத்துலக மட்டத்தில் காக்க பிராந்திய – பூகோள சக்திகளும் அவர்கள் வகுத்து வைத்த உலக ஒழுங்கும் தயாராகவே இருக்கிறது.

ஆனால் போர்க்குணத்துடன் உக்கிரமாக வெடிக்கும் மக்கள் போராட்டத்தை காக்க எந்த பொறிமுறையும் எதிரிகளிடம் இல்லை.
அதுவும் ‘பிரபாகரனியத்தை’ உட்செரித்த ஒரு இனம் ஒன்றுபட்டு தம்மோடு பொருதுவதை அவர்களுக்கு என்றுமே தடுக்கும் வல்லமை கிடையாது.

உண்மையைச் சொல்லப் போனால் இந்த அனுமதியினூடாக சிங்களம் தனது வெற்றியை தற்காலிகமாகத் தக்க வைத்திருக்கிறது..

ஆனால் மறுவளமாக களத்தின் மீதான தன்பிடியை மெல்ல மெல்ல பறிகொடுக்க தொடங்கியிருக்கிறது.

மக்கள் வலுச் சமநிலையை தமது பக்கம் சார்பாக வளைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த மாவீரர் நாளின் செய்தி இதுதான்.

ஏற்கனவே ‘நந்திக்கடல்’ கணித்து வைத்துவிட்டு காத்திருக்கும் செய்தி இது.

பரணி கிருஷ்ணரஜனி

Share This: