உறவுச்சோலை மறுவாழ்வுக்கழகத்தின் செயற்பாட்டை உலகத்தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தும் பிரமாண்டமான நிகழ்வு!

0
593

இலங்கைத் தமிழ்பொறியியலாளர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு 07.01.2018 அன்று மிகவும் சிறப்பாக நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் வி.பி சிவனாதன், யாழ்ப்பாண மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி, கிளிநொச்சி கந்தசுவாமி பிரதமகுரு பிரமசிறி ஜெக ஜெகதீஸ்வரன் குருக்கள், டொன்பொஸ்க்கோ இல்ல பொறுப்பாளர் அருட்சகோதரி மெட்டில்டா, பொறியியலாளர் சுதாகர், அமைப்பின் தலைவரும் பொறியியலாளரும் ஆகிய ஆர்த்தனன், கௌரவத்திற்க்கும் உரிமைக்குமான அமைப்பின் தலைவர் இளங்கோ, தொழில் அதிபர் செந்தூரன், நெய்தல் அமைப்பின் தலைவர் சூரியா மற்றும் பல அரசியல் சார்பற்ற பிரமுகர்கள், புத்திஜீவிகள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், எமது மக்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள் என பெருந்தொகையானோர் இந்த நிகழ்வில் பங்கு பற்றி மிகவும் சிறப்பாக நிகழ்வை நடத்தி முடித்து இருக்கின்றார்கள்.
4-1024x682

இந்த நிகழ்வின்மூலம் பொறியியலாளர்களின் பங்களிப்பும் மற்றும் அரசியல் அல்லாத அனைவரது ஒத்துழைப்பும் எப்படி இருக்கு என்பதை உலக தமிழ் மக்களுக்கு இந்த நிகழ்வு உணர்த்தி இருக்கின்றது. ”மக்கள் பணியே மகேசன் பணி” என்றதிற்க்கு அமைய உலகத்தில் உள்ள அனைத்து பொறியியலாளர்களும் ஒன்று இணைந்து படித்த சமூகத்தை திரட்டி எங்கள் வேலைத்திட்டங்களை வேகப்படுத்துவோம்.
3-1024x682-1

”கல்வி” இதுவே எமது சொத்தும் பலமும் எனவே எல்லோரும் அதை எங்கள் இளைய சமுதாயத்திற்கு வழங்க முன்வரவேண்டும். ஒரு நாட்டின் கட்டுமானத்தை உருவாக்குவது பொறியியலாளர்கள். எல்லோரும் ஒன்று இணைவோம்.
12-1024x682
8-1024x682
6-1024x682
5-1024x682
10-1024x682
11-1024x682
9
7-1024x682
1-1024x682
2-1024x682
13

Share This: