ஆறாம் அறிவுக் காரணம் : பிரபாகரன்கள் அன்றாடம் பிறக்கின்றார்கள்

0
1021

வா, போராடு,
வந்து போன தடம் பதி…..
எங்கோ பிறந்தோம்
எப்படியோ வளர்ந்தோம்
ஏதோ வாழ்கின்றோம்…
இதிலென்ன மெருமையுனக்கு யோசி….

வீடு, வாசல், பிள்ளை குட்டி
நாலு நட்பு, போலி வாழ்க்கை….
இதை மட்டும் செய்ய நீ எதற்கு
உன் தனித்துவம் எங்கே போச்சு ???
பிறந்த காரணத்தைக் கண்டறி
பிராச்சாரம் குறைத்து பிறர்க்குதவு…

உரிமைப் போர்களுக்குள் உன்னைப் புகுத்து
உடன்பாடில்லையெனில் ஓரமாய் ஒதுங்கு…
தாயாய் நீயும் கருணை காட்ட
பிரசவவலி பொறுக்க வேண்டாம்,
“அன்னை திரேசா” க்கு பிள்ளைகள் யாருமில்லை
அன்பைப் பரிமாற எல்லைகள் தேவையில்லை…

பயணத்தில் சிக்கல் கொண்டவனுக்கு
பாதை அமைத்துத் தரவேண்டியதில்லை
இருக்கும் பாதையை மறைக்காமல் நீயும்
இரக்கம் கொண்டு ஒதுங்கினால் போதுமே….
யாரும் எப்போதும் எப்படியுமாகலாம்
அரசனும் ஆண்டியாகலாம் மறவாதே…

அமெரிக்காவே கடனில் தான் மூழ்கியுள்ளது
உன் சின்னச் சின்ன பிரச்சனைகள் பெரிதா சொல்…

ஓடு, உன் பிறப்பின் காரணம் தேடு…
வா, போராடு, வந்து போன தடம் பதி….!!!!
பிரபாகரன்கள் அன்றாடம் பிறக்கின்றார்கள்
பிறந்த காரணம் கண்டறிந்தவனே
“காவியத் தலைவனாய்” சரித்திரம் படைக்கின்றான்…

நம்பு, நடக்கும்….
– ஐங்கரன்

Share This: