கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு பட்டம் ஏற்றிய போது சாவகச்சேரி பகுதியில் நடந்த விபரீதம்.

0
808

சாவகச்சேரியில் பட்டம் ஏற்றிய சிறுவன் கிணற்றில் விழுந்து பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச் சேரி பொலிஸ் பிரிவிற்குட் பட்ட கல்வயல் பகுதியில் பட் டம் ஏற்றிக்கொண்டிருந்த 16 வயது சிறுவன், கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரி ழந்த சிறுவன் ஜெயகுமாரன் தீசன் என தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் பட்டம் ஏற்றிக்கொ ண்டு பின்பக்கமாக ஓடிய போதே சிறுவன் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. மேலும் உயிரிழந்த சிறுவனின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை க்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.       

Share This: