யாழ் நவீன சந்தையில் நேர்மையாக கடமை செய்யும் ஊழியர்களை போதைக்கு அடிமையாக்கி தவறாக வழிநடத்தும் கடை முதலாளிகள்.

0
1585

யாழ் நவீன சந்தையில் கடமையை செய்யும் மாநகர ஊழியர்களை தமக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் அவர்களை பழிவேண்டும் முகமாக சில யாழ் நவீன சந்தைக் கடை முதலாளிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

சில சட்ட திட்டங்கள் பொதுமக்கள் சிரமங்களை ஏற்படுத்ததக் கூடாது என்பதற்காக மாநகர ஊழியர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள். அவ்வாறான நடைமுறைகளில் ஒன்றான கடைகளுக்கு முன்னால் விற்பனைப் பொருட்களை வைக்கும் நடைமுறையில் கடைக்கு முன்னால் மஞ்சள் நிற கோடு வரையப்பட்டு இருக்கும் அந்த கோட்டுக்குள் மட்டுமே கடை பொருட்களை காட்சிப் படுத்த அனுமதிக்கப்படும் இந்த செயற்பாடு மக்கள் நன்மை கருதி செய்யப்பட்ட நடைமுறைகளாகும்.

இந்த நடைமுறையை மீறும் கடைகள் மீது நடைவடிக்க எடுக்கப்படும் அவ்வாறு நடவடிக்கை எடுத்த ஊழியர் ஒருவரை பழிவாங்க நினைத்த சில பண முதலாளிகள் அந்த ஊழியருடன் நன்பர்களாக பழகி பின் போதை பழக்கத்தினைப் பழக்கி அவர்களை தப்பான நடத்தைக்கு ஊக்குவித்து பின் சாதூரியமாக சிக்க வைத்து இணையங்களில் அவதூறாக பரப்புரை செய்கிறார்கள்.

இவ்வாறான செயற்பாட்டுடன் தமிழர்களின் கலாச்சாரத்தை மற்றும் தமிழ் தேசியத்திற்கு கைகொடுத்துவரும் யாழ் பல்கலைகழக மாணவர்களையும் விட்டு வைக்காமல் அவதூறாக பரப்புரை செய்து வருகிறார்கள்.

இவ்வாறான சமூக வீரோதிகளின் செயற்பாட்டுக்கு வழியமைத்து அவர்களின் சூழ்ச்சி வலைகளுக்குள் அகப்படாமல் கடமை செய்யும் ஊழியர்கள் தமது கடமையை மிகுந்த அக்கறையோடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Share This: