சுவிஸில் மிகச் சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..! (படங்கள்)

0
656

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, “வேரும் விழுதும் 2018” கலைமாலை நிகழ்வானது கடந்த சனிக்கிழமை சூரிச்சில், மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 

ஆரம்ப நிகழ்வாக சிறப்பு விருந்தினர் திரு. சிவஸ்ரீ த.சரஹணபவானந்த குருக்கள் (பிரபல ஆன்மீக குரு -ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயம் -சூரிச்) வாசலில் மங்கள விளக்கை ஏற்றி வைக்க, அதனைத் தொடர்ந்து ஒன்றிய முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் இணைந்து மங்கள விளக்கேற்றலை நடத்திய பின்னர், விருந்தினர்கள் அனைவரும், ஒன்றிய உறுப்பினர்களால் மேடைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பின்னர் மேடையில் மங்கள விளக்கேற்றலை, பிரதம விருந்தினர் திரு விந்தன் கனகரத்தினம் (வடமாகாண சபை உறுப்பினர்) ஏற்றிவைக்க அவரைத் தொடர்ந்து சிறப்புவிருந்தினர்கள் திரு.எஸ்.கே. சண்முகலிங்கம் (சமூக சேவகர்), திரு.சொ.கருணலிங்கம், திரு.துரை சிவபாலன், திரு.சொ.யோகலிங்கம், திரு.வே.வேணுகுமார், திரு.ஏ.வசந்தன், திரு.இ.இரவீந்திரன் மற்றும் ஏனைய தமிழ் அமைப்புகளின் சார்பில், திரு.செல்வபாலன், திரு.சேகர், திரு.இரட்ணகுமார், போன்ற முக்கியஸ்தர்களால் மேடையில் மங்கள விளக்கேற்றல் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து இருநிமிட மௌன வணக்கம் இடம்பெற்று பின்னர் புங்குடுதீவு கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் திரு.முரளி ஐயா -பேர்ண்- அவர்களினால் ஆசியுரை நிகழ்த்தப்படடது.  இதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனம் நடைபெற்றது. அதன் பின்னர் சுவிஸ்ராகம் கரோக்கி இசைக்குழுவின்  பக்திப் பாடலைத் தொடர்ந்து, வரவேற்புரையை ஒன்றிய முக்கியஸ்தரான திருமதி.செல்வி சுதாகரன் வழங்கி அனைவரையும் வரவேற்றார். 

அதனைத் தொடர்ந்து “ஒன்றியத்துக்கு” வழங்கப்பட்ட, திரு.துரை சிவபாலனின் “அ, ஆ, இ,” புத்தக வெளியீடு இடம்பெற்று, அவரது உரையும் நிகழ்த்தப்பட்டது. புத்தகத்தை திரு.துரை சிவபாலன் வெளியிட்டு வைக்க, ஒன்றியத்தின் கல்விப் பொறுப்பாளர் திரு.சி.இலக்சுமணன், ஒன்றியத்தின் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அதேபோல் ஒன்றியத்தின் “வேரும் விழுதும் 2017” ஒளிநாடாவை (சி.டி) ஒன்றியத்தின் பொருளாளர் திரு.குழந்தை அவர்களினால் வெளியிட்டு வைக்க, ஒன்றிய முக்கியஸ்தர்கள் திரு.குமார், திரு.தயா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அத்துடன் ஒன்றியத்தின் “வேரும் விழுதும் 2018” விழாமலரை ஒன்றியத்தின் உபதலைவர் திரு.சஞ்சய், ஒன்றிய இளைநரனிப் பொறுப்பாளர் திரு.சதீசன், ஒன்றிய முக்கியஸ்தர் திரு.ஸ்ரீ இராசமாணிக்கம், ஒன்றிய உறுப்பினர் திரு.சபேசன் ஆகியோர் தலைமையில், பிரதம விருந்தினர் திரு.விந்தன் கனகரத்தினம் வெளியிட்டு வைக்க, ஒன்றிய கணக்காய்வாளர் திரு.பன்னீர்செல்வம், ஒன்றிய உறுப்பினர்களான, திரு.கமல், திரு.பிரேம்குமார், திரு.பிரதீபன், திரு.பாபு (தூண்), திரு.சுதாகரன், திரு.திகில் உட்பட சிலரினால் பெற்றுக் கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திரு.ஸ்ரீதரன் திருநாவுக்கரசு தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்று அனைத்து மக்களினாலும் பாராட்டுதலைப் பெற்றது. பட்டிமன்றத்தில் கலந்து கொண்ட அனைவரும், வயதில் மூத்தோர், மற்றும் ஒன்றிய உறுப்பினர்கள், ஆதரவாளர்களினால் கௌரவிக்கப்படடனர்.

அத்துடன் பொது வாழ்வில், சமூக சேவகர்களான ஒன்றியத்தின் வயதில் மூத்தோரான திரு.சிவகுமார் -பீல், திரு.மதி- பீல், திரு.வடிவேல்- தூண், திரு.சிவகுமார் -தூண் ஆகியோர் விருந்தினர்களால் கௌரவிக்கப் பட்டனர். 

அத்தோடு வாணி சர்மா ஆசிரியையின் “அக்கடமி ஆப் ஆர்ட்” மாணவிகளின் பல்வேறு நடனங்கள், மற்றும் பல்வேறு மாணவ மாணவிகள், “ட்ரீம் பாய்ஸ்” இளையோர் போன்றோரின் நடனங்கள் உட்பட பல்வேறு நடனங்களும், குறும்படங்களும், சுவிஸ்ராகம் கரோக்கி இசைக்குழுவினரின் இன்னிசை கானங்களும் இடையிடையே இடம்பெற்றது.

அத்துடன் “தலைமையுரை”யை, ஒன்றியத்தின் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் வழங்கி வைத்தார். அதேபோன்று பிரதம விருந்தினர் திரு.விந்தன் கனகரத்தினம் (வடமாகாண சபை உறுப்பினர்), சிறப்பு விருந்தினர்களில் திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் (சமூக சேவகர்), திரு. சிவஸ்ரீ த.சரஹணபவானந்த குருக்கள் (பிரபல ஆன்மீக குரு -ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயம் -சூரிச்), திரு.சொ.கருணைலிங்கம் (சமூகத் தொண்டர், பிரித்தானியா), திரு.சொ.யோகலிங்கம் (செயலாளர், பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரி சங்கம்), திரு.ஏ.வசந்தன் (ஊர்ப்பற்றாளர், லண்டன்) போன்றோரின் “சிறப்பு உரைகளும்” இடையிடையே இடம்பெற்றது.   

அத்தோடு சுவிஸ் ஒன்றியத்தால் நடைபெற்ற சுவிஸ் வாழ் தமிழ் மாணவர்களுக்கான  “அறிவுத்திறன் போட்டியில்” வெற்றியீட்டிய மற்றும் கலந்து கொண்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு, ஒன்றியத்தின் கல்விப் பொறுப்பாளர் திரு.சின்னத்துரை இலக்சுமணன் தலைமையில் திருமதி.லலிதா இலக்சுமணன், திருமதி.செல்வி சுதாகரன் ஆகியோர் முன்னிலையில் விருந்தினர்களால் நிகழ்த்தப்பட்டது.

விருந்தினர்கள் கௌரவிப்பு, நிகழ்வுகளைத் தந்தோர் கௌரவிப்பு, உட்பட அனைத்து கௌரவிப்பு நிகழ்வுகளையும்.. வயதில் மூத்தோர், ஒன்றிய உறுப்பினர்கள், மற்றும் அனுசரணை வழங்கியோர் மூலம் வழங்கி வைக்கப்பட்டது. இறுதியாக நன்றியுரையை ஒன்றியத்தின் செயலாளர் திரு.செ.சதானந்தன் அவர்கள் தெரிவிக்க, நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தது. நிகழ்வுகளை திரு.நிமலன், திரு.சுரேந்திரன், திரு.சுஜீவன் ஆகியோருடன் இணைந்து திரு.சதா தொகுத்து வழங்கினர்.

இதேவேளை விழா சிறப்பாக நடைபெற அனுசரணை வழங்கிய.., சாய் ட்ரடேர்ஸ் திரு.இரவீந்திரன், இம்போர்ட் தாஸ் திரு.ஸ்ரீதாஸ், என்.எஸ்.ஜுவெல்லரி திரு.சாந்தன், ஓல்டேன் கமல் டிரேடிங் திரு.கமல், அபிரா டெக்ஸ்ட்ரைல்ஸ் திரு.கண்ணன், திரு.இலட்சுமணன், திரு.குழந்தை, திரு.கிருஷ்ணகுமார், திரு.கிருபா, திரு.திகில், திரு.சண்முகம், திரு.நிமலன், திரு.கணேஷ், திரு.அன்பு, திரு.பிரதீபன்,  திரு.வசந்தன், திரு.சிவகுமார் தூண், திரு.பாபு தூண், திரு.இளங்கோ தூண், திரு.பிள்ளை, திரு.சிவகுமார்-பீல், திரு.ராஜா சூரிச், திருமதி.செல்வி சுதாகரன்,.. 

மற்றும் அறிவுத்திறன் போட்டி நிகழ்வின் மண்டப உதவி புரிந்த திரு.பாலசிங்கம் தயாபரன் குடும்பம், அன்றைய மதிய உணவு உட்பட அனைத்து செலவுகளையும் பொறுப்பேற்று உதவிய திரு.சதாசிவம் பன்னீர், திரு.தாமோதரம்பிள்ளை பிரேம்குமார், திரு.பத்மநாதன் வசந்தன் ஆகியோரும், 

“வேரும் விழுதும்” விழாவில், இன்னிசை வழங்கிய “சுவிஸ் ராகம்” குழுவினர், சூரிச் வரசித்தி மஹால் மண்டப உதவி புரிந்த திரு.கௌதமன், புகைப்பட உதவி புரிந்த திரு.கிருபா, வீடியோ உதவி புரிந்த திரு.சிவம், மேடையலங்கார உதவி புரிந்த திரு கைலை, துண்டுப்பிரசுர உதவி புரிந்த திரு.தாஸ், பிரதம விருந்தினரின் பயண செலவை பொறுப்பெடுத்த திரு.பாபு, திரு.கோபால் ஆகியோருக்கும், “வேரும் விழுதும்” விழாமலரை சிறப்புற பிரசுரித்து தந்த ஒன்றியத்தின் உபதலைவர் திரு.சஞ்சய், அவரது நண்பர்கள் திரு.சதீஷன், திரு.சபேசன், மற்றும் விழா மலரை இறக்குமதி செய்து தந்து உதவிய “ஏரோ லைன்ஸ்” நிறுவனர் திரு.ஸ்ரீ இராசமாணிக்கம் ஆகியோர் உதவி புரிந்து, விழா சிறப்புற நடைபெற தோள் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
038u
040y
042e
042g
042h
042i
042k
042s
046
049
049b
038s
038t
038r
038r
038q
038p
038g
038ce
038cd
038cc-1
038ca-1
038c
038b
038
035
028a
021a
020
015
010la
010l
010k
010j
010i
010h
010f
010e
010d
010ba
010
005
004a
003e
003c
003a
002a
002

Share This: