சுங்கச்சாவடியில் ஒரு சுரங்கம்! நடப்பது என்ன?

0
794

சுங்கச்சாவடியின் அறிமுகம் முதன்முதலாக அமெரிக்காவில் பயணம் செய்தபோது ஏற்பட்டது… ஆளே இல்லாத இடங்களில் சில சில்லரை காசுகளை போட்டுவிட்டு சென்றதாக ஞாபகம். இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கத்திற்கு பிறகு நியாயமாக சுங்க கட்டணத்தை செலுத்திவிட்டு செல்லவே எல்லோரும் விருப்பட்டிருப்பார்கள். ஆனால் உண்மையில் நடப்பது என்ன?!

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை எடுத்துக்கொண்டால் அதன் பணி நடைபெற்றபோது விழுப்புரத்தில் இருந்தே அந்த நிறுவனம் செயல்பட்டது. அப்படி செயல்படவே அந்த நிறுவனத்துக்கு லோக்கல் அரசியல்வாதியால் தொல்லை கொடுக்கப்பட்டது. கடைசியில் பணி தொடர பெரியளவில் கப்பம் கட்ட சொன்னார்கள். பணமாக இல்லாமல் ஒரு பொறியியல் கல்லூரியையே கட்டிகொடுத்தது அந்த நிறுவனம் . இன்றும் அந்த பொறியியல் கல்லூரி அதே தேசிய நெடுஞ்சாலையில் கம்பீரமாக நிற்கும். பெரியளவில் ஆரம்பிக்கப்பட்ட அந்த பொறியியல் கல்லூரி இன்று பொலிவிழந்துபோய் பணி புரியும் விரிவுளையாளர்களுக்கு பலமாத சம்பள பாக்கி . இதுதான் அந்த கல்லூரியின் இன்றைய நிலைமை.
tollgate_600

அப்படி கட்டிகொடுக்கப்பட்ட பொறியியல் கல்லூரிக்கு ஈடாக அதிகளவில் சுங்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதனை பயன்படுத்துவோர் அத்தனைபேருமே இதனை உணர்வார்கள். அப்படிபட்ட சுங்கச்சாவடிகள் அடித்து நொறுக்கப்படும்போது மக்கள் மகிழ்ச்சி அடையவே செய்வார்கள்.

இது ஒருபுறம்… நீங்கள் கடந்துசெல்லும் சுங்கச்சாவடிகளில் எத்தனை பேர் கவனித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை… பூத் ஒவ்வொன்றின் கீழும் சுரங்கம் வழியாக இணைக்கப்பட்டிருக்கும். அந்த சுரங்கங்களில் வசூலிக்கப்பட்ட பணம் அவ்வப்போது கீழே இறக்கப்படும். பல வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் நாள்தோறும் செலுத்த வேண்டும். இதில் கொடுமை என்னவென்றால் வசூலிக்கப்படும் தொகையில் பாதிக்கும் மேல் கணக்கிலேயே வராது, நம்பர் 2 அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்படும். அரசாங்கத்திற்கு மிகப்பெரியளவில் பொய் கணக்கே சமர்ப்பிக்கபடும். உண்மையில் இவர்கள் கணக்கில் காட்டாத தொகையே நாடு முழுவதும் கணக்கு எடுத்தாலே சில லட்சம் கோடிகள் தாண்டும். இவை எதுவுமே வெளியுலகத்துக்கு வராது, ஏனென்றால் இந்த நிறுவனங்களில் மறைமுகமாக பெரும் அரசியல்வாதிகளே மறைமுக முதலீட்டாளர்களா இருப்பார்கள்.
tollgate-tamil-nadu-velmurugan-3-1024x576

சமீபத்தில்கூட நொய்டா டோல்கேட் என்ற சுங்கச்சாவடி பொதுமக்களின் தொடர் நீதிமன்ற போராட்டத்தினால் இழுத்து மூடப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் முதலீடு செய்த பணத்தைவிட பலமடங்கு சம்பாதித்துவிட்டார்கள் என்று நிரூபிக்கப்ட்டதால். அதுபோலவே நாட்டில் உள்ள பல சுங்கச்சாவடிகளின் உண்மையான கணக்கை எடுத்தால் அவர்கள் முதலீடு செய்த பணத்தைவிட ஏற்கனவே பலமடங்கு பார்த்திருப்பார்கள் இது எப்போது தெரியவரும்… உண்மையான கணக்கு இருந்தால் மட்டுமே சாத்தியம். பொய் கணக்கு சொல்பவர்கள் கொள்ளையை தொடரவே விரும்புவார்கள்.
tollgate-tamil-nadu-velmurugan-4-1024x680

இப்போது சொல்லுங்கள் சுங்கச்சாவடியில் கட்டண நிர்ணயத்தை நியாயமான தொகை வைத்து நடத்த வேண்டுமா அல்லது மொத்தமாக அடித்து நொறுக்கவேண்டுமா?!

-அன்பழகன் வீரப்பன்

Share This: