பிரித்தானியாவில் நடைபெற்ற வீரத்தமிழர் முன்னணியினரின் தமிழருக்கான கருத்தரங்கு.

0
914

லண்டன் வீரத்தமிழர் முன்னணியினரால் நடத்தப்பெற்ற லண்டன் தென்மேற்கு பகுதி வாழ் தமிழருக்கான கருத்தரங்கு நேற்று (08.04.2018) ஞாயிற்றுக்கிழமை அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி பொறுப்பாளர் பேராசிரியர் திரு கல்யாணசுந்தரம் அவர்கள் சிறப்பாக பல விளக்கங்களை உறவுகளுக்கு வழங்கி இருந்தார்.

அப்போது பல உறவுகள் வீரத்தமிழர் முன்னணி, நாம் தமிழர் கட்சி, மற்றும் திரு. சீமான் போன்றவர்கள் பற்றி பல கேள்விகள் எழுப்பினர் அனைத்து கேள்விகளுக்கும் சீரான பதில்களை பேராசிரியர் திரு கல்யாணசுந்தரம் வழங்கி இருந்தார்.

காலத்தின் தேவை கருதி இந்தக் கருத்தரங்கு மிக சிறப்பாக நடை பெற்று இருந்தது.

சமீப காலமாக உலக தமிழர் இனம் “நாம் தமிழர்” என்ற ஒரு அடையாளமாக ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு வருவது யாராலும் மறுக்க முடியாத கூற்று.

ஆண்ட இனம் மீண்டும் ஆழ தம்மை தயார் படுத்தி வருவது தெட்டத் தெளிவாக புலப்படுகிறது.
IMG-20180409-WA0048
IMG-20180409-WA0051
IMG_20180406_233808

Share This: