லண்டனில் மைத்திரிக்கு எதிர்ப்பு அலை!! GoBackMY3 (படங்கள்)

0
1026

இலங்கை ஜனாதிபதியை எதிர்த்து லண்டனில் கவயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்பு குழு, தமிழ் இளையோர் அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில், நாடு கடந்த தமிழீழ அரசின் பூரண ஆதரவுடன் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொதுநலவாய தலைவர்களின் உச்சி மாநாட்டிற்கு லண்டன் வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பொதுநலவாய மாநாடு நடைபெற்ற மண்டபத்திற்கு எதிராக ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
IMG-d65d6e39ff9a36a302ded750fbef08f4-V

தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு போன்ற பல பிரச்சனைகள் தொடர்பாக இன்னும் தீர்வு காணப்படவில்லை.

தற்போதும் கட்டமைப்பிலான இனவழிப்பினை இலங்கை பேரினவாத அரசு செய்து வருகின்றது போன்ற பல குற்றச்சாட்டுக்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் கோஷங்களாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
IMG-88d988d8d320518f6feaf75ba133ff3b-V

மேலும் மைத்திரிக்கு எதிராக GoBackMY3 என்று குறிப்பிடப்பட்ட பதாதைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை  இந்தியப் பிரதமர் மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ”கோ பேக் மோடி” (#GoBackModi) என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங் ஆகி முதல் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
IMG-f11d8d70701609f939bd58cbbe4e07f6-V

Share This: