இந்தியாவிலிருந்து வந்து யாழில் மீள்குடியேற தயாராகும் 1110 குடும்பங்கள்.

0
2415

இந்தியாவில் புகழிடம் கோரி இருந்து அண்மையில் இலங்கைக்கு வந்த யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 1110 குடும்பங்கள் யாழில் மீள் குடியேறுவதற்கு பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ் மாவட்டச் செயலகத்தில் இந்த புதிய பதிவுகளை மேற்கொண்டு வருவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து யாழ். மாவட்டத்திற்கு மீள்குடியேறியுள்ள மக்களை பதிவு செய்யும் நடவடிக்கை மீள்குடியேற்ற அமைச்சின் எற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்.மாவட்ட மேலதிக செயலாளர் எஸ்.முரளிதரன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்,
காணியில்லாத 25 குடும்பங்களுக்கு காணியுடன் சேர்ந்த புதிய வீட்டுத் திட்டத்தினை முதற்கட்டமாக உரும்பிராயில் வழங்க தனியார் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.

இந்த திட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். 1110 குடும்பங்கள் தற்போது மீள்குடியேறுவதற்கு தயார் நிலையில் இருக்கின்றனர்.

இதில் முதற்கட்டமாக வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட 80 குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்காக வீடமைப்பு அதிகார சபை, மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக இந்த வீட்டுத்திட்டங்களை வழங்க எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டார்.

Share This: