எங்கே போனீர்கள் அண்ணா..?

0
1454

எங்கே போனீர்கள் அண்ணா..?

நீங்கள், எங்களோடு இருக்கும் போது
கேட்காத சொற்களை
இப்போது நாம் கேட்கிறோம்.

கற்பழிப்பு!
கொலை!
கொள்ளை!
துஷ்பிரயோகம்!
பொய்!
ரவுடித்தனம்!
ஏமாற்றுதல்!
கொலை மிரட்டல்!
வாள்வெட்டு!
இப்படி பல…

பெண்கள், நடு இரவிலும்
50 பவுன் நகைகளை அணிந்து
சுதந்திரமாக உலாவிய
அந்த வசந்த காலம்,
திரும்ப வராதா அண்ணா..?

எலும்புத்துண்டேயே
எச்சில் வடிய பாக்கிற கூட்டம்.
எம்மவர் கூட…
இன்று குருதி குடித்த அரக்கராயினர்.!

அன்று…
இப்படி இல்லையே அண்ணா.

அன்று பொட்டு அம்மானுக்கு
பயந்து ஒழுக்க சீலர் ஆயினர் போல.
விதைக்கப்பட்ட மண்ணிலிருந்து
பிடுங்கி எடுக்கப்பட்டர்களானோம்.
மாதரை தெய்வமாக கொண்ட
நம் மண்ணில் இன்று மானம் இழந்து
தவிக்கின்றோம்.

தாயைப் பிரிந்த சேயின் நிலைமைதான்…
அண்ணா, இப்போது எங்களுக்கு.!!
உங்கள் பாதம் வேண்டும் அண்ணா.
பூஜிக்கத் துடிக்கிறோம்.
உங்கள் வீரம் எங்களுக்கு இல்லையே…

எம்மை, அநாதரவாக தவிக்கவிட்டு
எங்கே போனீர்கள் அண்ணா..?

– மாயவனின் சூனியக்காரி

Share This: