வாகன விபத்து: சம்பவ இடத்திலேயே சாரதி பலி!

0
420

ஏ35 பரந்தன் முல்லை வீதி, சுண்டிக்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். 

புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும், பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பை நோக்கி டிப்பர் ரக வாகனமும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் முச்சக்கரவண்டியை ஓட்டிச்சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். 

இதேவேளை, டிப்பர் வாகனத்தை ஜீப் வாகனம் ஒன்று முந்திச் செல்ல முற்பட்டுள்ளதுடன், டிப்பர் வாகனத்தின் பின்னால் மோதியுள்ளது. இதையடுத்து குறித்த டிப்பர் வாகனம் முன்னால் வந்த முச்சக்கர வண்டியை மோதியுள்ளது. இதில் மூன்று வாகனங்களுக்கும் ஒன்ருடன் ஒன்ரு மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறடை குறிப்பிடத்தக்கது.

நன்றி: வீரகேசரி

Share This: