வவுனியாவில் மர்ம நபர்களால் வீட்டிலிருந்த 8 மாதக் குழந்தை கடத்தல்…!! அதிகாலை வேளையில் பயங்கரம்…!!

0
566

வீட்டில் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 8 மாத ஆண் குழந்தை ஒன்றினை வான் ஒன்றில் வந்த குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். லண்டனில் உள்ள கணவனே கடத்தலை மேற்கொண்டதாக தாயார் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியா, குட்செட் வீதி, முதலாம் ஒழுங்கையில் இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
IMG_04151-768x576

வவுனியா, குட்செட் வீதி, முதலாம் ஒழுங்கையில் வசித்து வரும் 22 வயதுடைய யுவதி ஒருவர் லண்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இந்தியா சென்று திருமணம் செய்துள்ளார். கணவன் லண்டன் செயன்றதும் குறித்த யுவதி வவுனியாவில் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் கணவன் ஏற்கனவே திருமணம் செய்தவர் என்பது தெரியவந்ததன் காரணமாக இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு கடந்த 5 மாதங்களாக குறித்த யுவதி கணவனுடனான தொடர்பை துண்டித்துள்ளார். இதன்போது கணவன் தனது குழந்தை தருமாறு மிரட்டியதுடன், குழந்தையை கடத்துவேன் எனவும் தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.
IMG-17e9a60b1c4944689eb9270869120655-V

இந்த நிலையில் அதிகாலையில் தாயாருடன் குழந்தை உறங்கிக் கொண்டிருந்த போது வான் ஒன்றில் வந்த 6 இற்கும் மேற்பட்டோர் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் சென்றுள்ளனர். குழந்தை கடந்தப்பட்டு சிறிது நேரத்தில் லண்டனில் உள்ள கணவன் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியிருந்தார். இதனால் இந்தக் கடத்தல் தனது கணவனால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

8 மாத ஆண் குழந்தையான வானிஷன் எனும் குழந்தையே இவ்வாறு கடத்தப்பட்ட குழந்தையாகும். இது தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் வவுனியா பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share This: