சுவிஸ்லாந்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு வழக்கின் வெற்றிக்கு காரணமான முக்கிய மனிதன்! யார் தெரியுமா??

0
873

விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் அண்மையில் சுவிஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

அதன்படி விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு இல்லை என்று சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாக அறிவித்து, சில விடுதலைபுலிகள் உறுப்பினர்களை விடுதலை செய்து அவர்களுக்கு நஷ்ட ஈடும் பெற்றுக்கொடுத்துள்ளது.

இவ்வாறு விடுதலைப்புலிகளின் அமைப்புக்கும், புலிகளின் ஆதரவாளர்களுக்கும் கிடைத்த இந்த மாபெரும் வெற்றிக்குப் பின் ஒரு மனிதர் இருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னாள் சுவிஸ் கிளை பொறுப்பாளரான குலம் என்பவரே அந்த தனி மனிதர்.

இந்த வழக்கு தொடர்ந்து நடைபெறுவதற்கும், சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்ததற்கும், இவருடைய பங்களிப்பு என்பது அளப்பரியதாகவே இருந்தது.

அத்துடன், குறித்த வழக்கில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக சுமார் 5,000 பேருக்கும் அதிகமான பொது மக்களின் கையெழுத்தை சேகரித்து நீதிமன்றிடம் கையளித்தார்.

சுவிஸ்லாந்தில் கையெழுத்தை சேகரிப்பதற்கு பொது நிகழ்வுகள் இடம் பெற்ற இடங்களிற்கு சென்ற வேளை பலரால் அவமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் திரு. குலம் அவர்கள் மற்றும் அவரைச் சாந்த நண்பர்களால் சேகரிக்கப் பட்ட கையெழுத்தை சுவிஸ்லாந்து நீதி மன்றம் மிக உண்ணிப்பாக அவதானித்ததுடன் வெற்றியில் அதிக செல்வாக்குச் செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
625.500.560.350.160.300.053.800.900.160.90

இவ் வழக்கை முன் நகர்திய சுவிஸ்லாந்தின் மூத்த சட்டத்தரணி திரு.குலம் அவர்களின் நட்பின் அடிப்படையில் அதீத அக்கரை காட்டியவர் என்பதும் குறிப்பிடத் தக்கது அவரே குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது

அந்த வகையில் தனி மனிதராக நின்று குலம் என்பவர் இந்த வழக்கு வெற்றி பெறுவதற்கு அயராது பாடுபட்டார் என்றால் மிகையாகாது.

ஒழுக்கமும், பணிவும் கொண்ட இவருடைய குணத்தாலும் இவருக்கு இன்றும் உரிய மரியாதை கிடைத்து வருவதுடன், இந்த வெற்றிக்குப் பின் இவர் இருப்பது இவர் மீது உள்ள மரியாதையை கூட்டுகின்றது.

எனினும், இவருக்கு எதிராகவும், இவருடைய செயற்பாட்டுக்கு எதிராகவும் சிலர் செயற்பட்டு வருவதையும், தவறான கருத்துக்களை பரப்புவதாகவும் சுவிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Share This: