தமிழ் இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்வது அவர்களது சொந்த உரிமை- மெலனி திசநாயக்கா

0
2242

தமிழ் இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளவும் அவர்களது சொந்த உரிமைக்காக யுத்தம் செய்வதையும் தேர்ந்தெடுத்தது எதனால்? – மெலனி திசநாயக்கா

எப்படி மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்யலாம் ?

(சட்டத்தரணி மெலனி திசநாயக்கா அவர்கள் உயிரணை நூல் வெளியீட்டில் ஆற்றிய ஆங்கில உரையினை தமிழாக்கம் செய்து தந்த துளசிச்செல்வன் அவர்களுக்கு நன்றிகள்)
உயிரணை

உயிரணை.

அவையோர்களுக்கு மாலை வணக்கம், என்னை இந்நிகழ்வுக்கு அழைத்து உங்கள் முன்பேசும் பொன்னான வாய்ப்பினை தந்தமைக்கு, முதலில் உங்கள் எல்லோருக்கும் நன்றி சொல்லக் கடைப்பட்டிருக்கிறேன்.

நான் சிங்கள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவள், உங்களது நீதிக்கும் சுதந்திரத்துக்குமான போராட்டத்திற்கு ஆதரவளிப்பதில் இன்று பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.

நான் ஒரு மனிதவுரிமை சட்டத்தரணியாகவும் பாதிக்கப்படவர்களுக்காய் குரல் கொடுப்பவராகவும் இருந்திருக்கிறேன். இதன் போது பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட தமிழர்களுக்கு சட்ட உதவிகளைச் செய்திருக்கிறேன். என்னிடம் உதவி பெற்றவர்களில் சிலர் முன்னாள் போராளிகளாகவும் இருந்தார்கள்.

உயிரணை நூலில் நாயகனாக வரும் ஆதித்தன் என்ற போராளி என்னை அழமட்டும் வைக்கவில்லை. இலங்கையில் உள்ள தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் தொடர்பாக நல்ல புரிதலையும் ஏற்படுத்தியிருக்கிறான் .

மெலானி திஸநாயக்க
மெலானி திஸநாயக்க

எனக்கு உயிரணை நாவலினை வாசிக்கும் நல்லதொரு வாய்ப்புக் கிடைத்தது. உயிரணை என்பது Dam of life என்று ஆங்கிலத்தில் பொருள்படும்.

எனக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது. இந்த நாவலினை மொழிபெயர்த்துத் தந்த செல்வி யனுதா, ரூபினி, போன்றோருக்கு நான் கட்டாயம் நன்றி சொல்ல வேண்டும்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து தனது தாய்நாடான தமிழீழத்துக்காகப் போரிட்ட ஒரு விடுதலைப் போராளியினுடைய உண்மைக்கதை இது. இந்த நாவலானது ஆதித்தன் போராட்டத்தில் இணைந்ததில் இருந்து போரின் முடிவு வரையான அவனது சுயநலமில்லாத பயமற்ற விடுதலைப்பயணத்தை விபரித்துச் செல்கிறது.

அத்துடன் இறுதிப் போர்காலகட்டத்தில் கற்பனை செய்து பார்க்க முடியாதளவு அவன் எதிர் கொண்ட துன்பங்களை, அரச படைகளின் கட்டுப்பாட்டுக்குள் அவன் இருக்கும் போதும் இலங்கையில் இருந்து உயிர்தப்பி வரும் வரையிலும் அனுபவித்த கொடுமையான அனுபவங்களையும் உள்ளடக்கியிருக்கிறது.
14192737_149141128867034_5539598821759516305_n

இந்தக்கதையை இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் மூன்று பகுதிகளாக என்னால் வகைப்படுத்த முடிகிறது.

முதலாவது பகுதி மிக முக்கியமானதும் மனதில் பதிந்து நிற்பதுமாய் அமைகிறது. இந்த ஆவணம் விடுதலைப்புலி அங்கத்துவர்கள் பற்றி எங்களில் பலர் அதிகம் அறியப்படாத நிறைய விபரங்களை உள்ளடக்கியதாக அமைகிறது.

நான் ஒரு சிங்களக்குடிமகளாக இலங்கையரசு எங்களிற்கு அளித்த பொய்யான கருத்துருவாக்கங்களால் விடுதலைப்புலி அங்கத்துவர்களை கொடுமையான பயங்கரவாதிகள் என்றே நம்புவது வழமை.

ஆனால் இந்த நாவல் விடுதலைப்புலிகள் அங்கத்தவர்களின் உண்மையான சுயநலமற்ற வாழ்க்கையையும் அவர்களது மாசற்ற தேசப்பற்றையும் அவர்களின் ஒழுக்கநெறியையும் எனக்கு நன்கு புலப்படுத்தியிருக்கிறது.

ஏன் விடுதலைப்புலிகள் அவர்களது இறுதி முயற்சியாக ஆயதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்? ஏன் தமிழ் இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளவும் அவர்களது சொந்த உரிமைக்காக யுத்தம் செய்வதையும் தேர்ந்தெடுத்தார்கள்? என்பதையும் அவர்களது உண்மையான உணர்வுகளையும் சுதந்திரத்திற்கான தாகத்தினையும் இந்நூல் விபரிக்கிறது.

அவர்களது தியாகங்களும் அற்பணிப்புகளும் வார்த்தைகளுக்கு அப்பாலானவை. அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்களின் விடுதலைக்காக தங்கள் முழு வாழ்வையும் உவந்தளித்தவர்கள்.
நேர்த்தியான ஒழுக்கக் கட்டுப்பாட்டைப் பேணியவர்கள் விடுதலைப்புலிகள். இது போன்ற நல்ல கட்டுக்கோப்பான இராணுவத்தினையோ அல்லது அமைப்பினையோ பற்றி நான் ஒருபோதும் பார்த்தோ அல்லது கேட்டோ அறிந்ததில்லை. இதன் வழிகாட்டியான விடுதலைப்புலிகளின் தலைவர் வார்த்தைகளின் வர்ணிப்புக்கு அப்பாலானவர்.
Thalaivar1-1

விடுதலைப்புலி வீரர்களது வாழ்வு நெருக்கடிகள் நிறைந்த வேளைகளிலும் பெருமையுடனும் போற்றும் வகையிலும் வாழும் வாழ்க்கையினால் அதன்பால் நான் ஈர்க்கப்படுகிறேன்.

இரண்டாவது பாகம் மகிழ்ச்சிகளதும் பயங்கரங்களினதும் கலவையாக அமைகிறது. 2002 தொடக்கம் 2006 இற்கு இடைப்பட்ட சமாதான பேச்சுக்கள் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப்புலி வீரர்களது அனுபவங்களையும் உணர்வுகளையும் உள்ளடக்கியதாக உள்ளது.

இனப்பிரச்சனை விவகாரத்துக்கு ஒரு போரில்லாத முடிவைப் பெறுவதற்கு உண்மையான நம்பிக்கையுடன் சமாதானப் பேச்சுக்களில் விடுதலைப்புலிகள் நுழைந்தார்கள்.

ஆனால் இலங்கை அரசாங்கம் குறிப்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமாதானப் பேச்சுக்களை விடுதலைப்புலிகளுக்கு வைக்கப்படும் ஒரு பொறியாக வடிவமைத்தார்.

விடுதலைப்புலிகளது பலத்தையும் விடுதலைப்புலி வீரர்களது மனோபலத்தையும் சிதைப்பதற்கு மிகவும் வஞ்சகத்தனமும் தந்திரமும் கொண்ட பொறியாக வடிவமைக்கப்பட்டது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஆதித்தன் உட்பட அனேகமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் தாம் உண்மையாக போராடிய மக்களுக்காக சந்தேகத்திற்கு இடமற்றதாக கருதினர்.

இதனூடு விடுதலைப்புலிகள் வன்னியில் மனதைக் கவரும் வகையிலான அனைத்து அடிப்படை சமூகக்கட்டமைப்புகளுடன் கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சி செய்தனர். ஆரம்பத்தில் சமாதானம் சீராகச் சென்றுகொண்டிருந்தாலும் சிறிலங்கா அரசின் கோழைத்தனமான யுத்தநிறுத்த மீறல்களால் படிப்படியாக சமாதானம் சீர்குலையத்தொடங்கியது. ஆச்சீர்குலைவுகள் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு வழிகோலியது.
14238112_149141065533707_2442186772515020441_n

போர்க்காலத்தில் ஆதித்தன் அனுபவித்த துன்பமானது மிகவும் பயங்கரமானது.

விடுதலைப்புலிகள் இறுதிப் போர்க்காலகட்டத்தில் எவ்வாறு தமிழ் மக்களை பாதுகாக்க தம்மால் செய்யக்கூடிய அனைத்து சிறப்பான முயற்சிகளையும் செய்திருந்தனர் என்பதை இந்நூல் விளக்குகிறது.

மக்களது வாழ்வை பாதுகாப்பதற்காக தங்களது வாழ்வைக் கொண்டு ஒரு அணையமைத்திருந்தார்கள். இதுவே புத்தகத்தின் பிரதான தலைப்பாகவும் வந்திருக்கிறது. இந்தப் பகுதி நெஞ்சைத் தொடுவதாகவும் நிச்சயமாக வாசகரை அழவைப்பதாகவும் அமைந்திருக்கிறது.

மூன்றாவது பகுதி மிகவும் துயரம் நிறைந்த பகுதியாகும். இது ஆதித்தன் எப்படி கொடுமையான போரிலிருந்து உயிர் தப்பினான் , நாட்டிலிருந்து தப்பும் வரை எவ்வாறு தனது உயிரைப் பாதுகாத்தான் என்பதைச் சொல்கிறது.

சிறப்பாக சொந்த சமூகத்தினரே அவனை நடத்திய விதம் மூலம் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் சகிக்க முடியாதிருந்தது.

அவன் தனது வாழ்வை நாட்டிற்காக தியாகம் செய்திருந்தான். ஆனால் இப்பொழுது உண்பதற்கே போராடிக் கொண்டிருந்தான். நாங்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும். எங்களது கண்களைத் திருப்பி பார்வையற்றவர்களாக இருந்தமைக்காக.

சொந்த நாட்டிற்காக யார் ஒருவர் போராடுகிறாரோ அவர் மதிக்கப்பட வேண்டும். ஆனால் கசப்பான உண்மை அவனது சமூகமே அவனைக் கண்டு கொள்ளவில்லை. இது கண்டிப்பாக மாறவேண்டிய ஒன்று.

ஏன் ஆதித்தன் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்தான் ?

அவன் ஒரு பயங்கரவாதியா ? ஆதித்தனைப் போன்ற இளைஞர்கள் தமிழ் இனத்தை இன அழிவிலிருந்து காப்பதற்கு ஆயதம் எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அவன் தமிழ்த்தாய் நாட்டின் இழந்து போன சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்காக மட்டுமே போரிட்டான். இது எப்படி பயங்கரவாதமாக இருக்க முடியும்?

எப்படி மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்யலாம்?

இலங்கையரசாங்கம் ஒரு லட்சத்து நாற்பதினாயிரத்துக்கும் அதிகமான தமிழ்மக்களைக் கொன்று ஒரு இரத்தம் தோய்ந்த முடிவையே போரின் மூலம் வழங்கியிருக்கிறது.

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த பல விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஈவிரக்கமற்று கொல்லப்பட்டார்கள். ஏனையவர்கள் சித்திரவதைகளுக்கும் பாலியல் வல்லுறவகளுக்கும் ஆளானார்கள். இவைகள் எல்லாம் பயங்கரவாதம் இல்லையா? ஏன் மேற்கு நாடுகள் இப்போதும் மௌனமாயிருக்கிறார்கள்?

தமிழ்மக்கள் அவர்களது சொந்த உரிமைக்காகவும் சொந்த சுதந்திரத்துக்காகவும் போரிட்டார்கள். வுpடுதலைப்புலிகளே தமிழ் மக்களது ஒரேயொரு பிரதிநிதிகளாகவும் இருந்தார்களே தவிர பயங்கரவாதிகளாக அல்ல.

தமிழ்மக்கள் சிங்கள மக்களைப் போலவே சுதந்திரத்துடன் கூடிய அமைதியான வாழ்க்கையை வாழ்வதற்கு நிறையவே உரிமை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் எல்லா வழிகளிலும் எங்களுக்கு (சிங்களமக்களுக்கு) சமமானவர்கள்.

உண்மையில் இனவாத சிங்கள அரசாங்கம் தான் பயங்கரவாதிகளாகவும் போர்க்குற்றவாளிகளாகவும் இருக்கிறார்கள்.

எந்தவொரு உண்மையான பௌத்தனும் நல்ல சிங்களக்குடிமகனும் இன அழிப்பைச் செய்த கடந்தகால தற்கால இலங்கை அரசுடன் ஒருபோதும் ஒத்துப்போகப் போவதில்லை.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருக்கும் வேளையில் நாங்கள் கட்டாயம் இந்தப் போராட்டத்தை தொடர வேண்டும். இதுவே நாங்கள் தொடர்ந்து அரசியல் ரீதியாகவும் சமாதான வழியிலும் சுதந்திரத்துக்காக போரிடுவதற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

ஆதித்தன் கதை என்னை மாற்றிவிட்டது. இது தமிழ் மக்களின் விடுதலைப் போருக்கு பின்னாலுள்ள உண்மைகளைப் புரிந்து கொண்டு உங்கள் முன் என்னை எழுந்து நிற்க வைக்கிறது.

இதுபோன்ற வரலாறுகள் புத்தகங்களாக எழுதப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதிக புத்தகங்கள் சிங்கள மக்களும் உலகத்தில் உள்ள ஏனையோர்களும் அறிவதற்கு தெளிவுற புரிந்து கொள்ளும் வகையில் விபரமாக எழுதப்பட வேண்டும்.

நான் உண்மையில் எழுத்தாளர் சாந்தியை அவரது மிகச்சிறந்த பணிக்காக வாழ்த்துகிறேன்.

எழுத்தாளர் சாந்தி ரமேஷ்
எழுத்தாளர் சாந்தி ரமேஷ்

நிறைவாக :- இத்தால் நான் உறுதியளித்துக் கொள்வது யாதெனில், நாங்கள் சிங்கள சகோதர சகோதரிகள் அதாவது புத்தரை உண்மையாக பின்பற்றுபவர்கள். உங்களது சுதந்திரத்திற்கான போராட்டத்துடன் உங்களுடன் நாங்களும் நிற்போம்.

உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருதடவை நன்றிகள். இந்த நல்வாய்ப்பினை எனக்குத் தந்தமைக்காக.

உயிரணை – நூல் விமர்சனம்

Share This: