“அண்ணா என்ன வெட்டாதே” “நான் ஒரு தப்பும் செய்யலை” என்று கெஞ்சிய தலித் சிறுமியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த காமக்கொடூரன்.

0
1844

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், தளவாய்பட்டி வருவாய் கிராமம், சுந்தரபுரம் தெற்கு காட்டு கொட்டையில் சுமார் 3.கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டில் தலித் சாமிவேல், சின்னப்பொண்ணு தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சர்குருநாதன் என்ற மகனும் அருள்ஜோதி ராஜலெஸ்மி என்ற இரு மகளும் இருந்தனர். அருள்ஜோதிக்கு மட்டும் திருமணம் ஆகி இருந்தது.

சாமிவேலும் மகன் சர்குருநாதனும் டாடா ஏசி வண்டி ஓன்று வைத்து தொழில் செய்து வந்தனர். இரண்டாவது மகள் ராஜலெஸ்மி 13 வயது சிறுமி அரசு பள்ளியில் 8வது வகுப்பு படித்து வந்துள்ளாள். இவர்களின் தோட்டம் வீட்டருகில் அதாவது தோட்டக்காட்டில் முதலியார் சாதியை சார்ந்த குழந்தைவேல் மகன் தினேஷ்குமார் சாரதா தம்பதிகள் அவனது தம்பி சசி என இரு குடும்பம் மட்டும் வசித்து வந்துள்ளனர். தினேஷ்குமாருக்கு திருமணம் ஆகி ஆண் குழந்தை ஓன்று உள்ளது.
44672354_2018710844863417_2759526851436085248_n

தினேஷ்குமார் அடிக்கடி வெளி ஊருக்கு சென்று கதிர் அறுக்கும் இயந்திரம் வைத்து தொழில் செய்கிறவன், வழக்கம் போல கடந்த ஆயத பூஜை தினத்தன்று 19.10.2018ம் தேதி வீட்டுக்கு வந்து இருக்கிறான். வழக்கம் போல தலித் சிறுமி ராஜலெஸ்மி தினேஷ்குமார் தோட்டத்திற்கு பூ பறிக்க போவது வழக்கமாம், இதனால் சிறுமியிடம் அவளது தனிமையை பயன்படுத்தி சிறுமியை பாலியல் உறவுக்கு அழைத்து உள்ளான் தினேஷ்குமார். மேற்படி தினேஷ்குமார் தவறான அணுகுமுறையை பேட்ஸை சிறுமி ராஜலெஸ்மி தனது தாய் சின்னபொண்ணுவிடம் சொல்லி இருக்கிறாள். மேற்படி விஷயத்தை வெளியே சொல்லாமல் தனது கணவன் இடமும் சொல்லாமல் சிறுமியிடம் மட்டும் இனிமேல் அங்கு பூ பறிக்க போகாதே என்று சொல்லி வைத்துள்ளார்.
Untitled-1-8

இதனால் 22.10.2018ம் தேதி மாலை 5.00 மணிக்கு தினேஷ்குமார் மனைவி சாரதா சின்னப்பொண்ணு வீட்டுக்கு வந்து வழக்கமாக வந்த பூ பறிப்பீர்களே இன்று ஏன் இருவரும் வரவில்லை என்று கேட்டு உள்ளார். அதனால் மேற்படி தினேஷ்குமாரின் விஷயத்தை வெளியே சொல்லாமல் மறைக்கவும், அன்றய தினம் சிறுமி சாரதாவை பார்க்க தினேஷ்குமார் வீட்டுக்கு போக சாராத வீட்டில் இல்லை, அப்போதும் தினேஷ்குமார் சிறுமி ராஜலெஸ்மி இடம் நீ என்னோடு படுத்தாள் பூ கோர்க்க நூல் தருகிறேன் என்று கூறி இருக்கிறான்.
body

அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த ராஜலெஸ்மி சின்னபொண்ணுவிடம் சொல்லி அழுது இருக்கிறார்கள், மேற்படி சம்பவத்தை தினேஷ்குமார் மனைவி சாரதா தனது புருஷன் பாலியல் விஷயத்தை மோப்பம் பிடித்து சத்தம் போட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார் கையில் வீட்சு அருவாளுடம் அரைக்கால் டௌசரோடு சின்னப்பொண்ணு வீட்டுக்குள் இரவு 7.30க்கு புகுந்து இருக்கிறான். சின்ன பொண்ணு “என்னப்பா இப்படி வார” என்று தடுத்தும். “நீ நகருடி பற தேவடியா” என்று சொல்லிக்கொண்டே சின்ன பொண்ணுவை சுவரில் தள்ளி போட்டு உள்ளான்.
dead-body

அங்கிருந்த சிறுமியை கழுத்தின் பின் பகுதியில் அரிவாளால் வெட்ட முற்படும்போது “அண்ணா என்ன வெட்டாதே” “நான் ஒரு தப்பும் செய்யலை” என்று சிறுமி போட்ட சத்தம் மட்டும் கடைசியாக தாய் சின்னப்பொண்ணு காதில் விழுது உள்ளது. கேட்டு இருக்கிறாள் அப்புறம் சத்தமே இல்லையாம், சிறுமியை வெளியே இழுத்து வந்து போட்டுவிட்டு தலையை கையில் கொண்டு போய்விட்டானாம்,

இரவு சுமார் 7.30 என்பதால் இருட்டு வேறு. அதிர்ச்சி கலைந்து சின்னப்பொண்ணு அலறவும்தான் பக்கத்து வீட்டில் வசிக்கிற சாமுவேல் தம்பி குடும்பம் ஓடி வந்து முண்டமாக கிடந்த சிறுமி உடலை பார்த்து சத்தம் போட்டு உள்ளனர். கையில் தலையோடு போன காமக் கொடூரன் அவன் வீட்டுக்கு போய்விட்டு மீண்டும் வந்து ரோட்டில் தலையை போட்டு உள்ளான். பின்னர் தினேஷ்குமார் அவனது தம்பி சசி, அவன் மனைவி இரண்டு பெரும் அவனை ஆத்தூர் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளனர்.
head

ஆத்தூர் டவுன் காவல் நிலையம் ஆய்வாளர் திரு கேசவன் அவர்கள் எதிரி மீது Cr.No. 547 of 2018 U/s 294(b), 302 IPC and Section 3(1) (r) (s) 3(2) (va) S.C/S.T (PoA) Amendment Act 2015 பதிவு செய்து சிறைப்படுத்தி உள்ளார்.

Reported By

Arumugam K.
Social Justice, Madurai – 17.
Cell ; 9442214254.

கீழ் இணைக்கப்பட்ட செய்தியானது தமிழக ஊடகங்கள் வெளியிட்ட செய்தியாகும்.

ஆத்தூர்: பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொலை! தலையை துண்டித்து சாலையில் வீசிய கொடூரன்!!

ஆத்தூர் அருகே, வீடு புகுந்து பள்ளி மாணவியை கழுத்து அறுத்துக் கொலை செய்ததுடன், தலையை துண்டித்து சாலையில் வீசிவிட்டுச் சென்ற பயங்கர நிகழ்வு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூலி வேலை:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டியை சேர்ந்தவர் குழந்தைவேல். இவருடைய மகன் தினேஷ்குமார். நெல் அடிக்கும் இயந்திர ஆபரேட்டராக கூலி வேலை செய்து வருகிறார்.
 
இவருடைய மனைவி சாரதா. இவர்கள் வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள தெற்குக்காடு பகுதியில் சாமிவேலு & சின்னப்பொண்ணு தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
 
இந்தத் தம்பதிக்கு ராஜலட்சுமி (14) என்ற மகள் இருந்தார். அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். திங்கள் கிழமை (அக்டோபர் 22, 2018ம் தேதி) இரவு 7.30 மணியளவில் சின்னப்பொண்ணுவும், சிறுமி ராஜலட்சுமியும் (14) வீட்டுக்குள் அமர்ந்து பூக்கட்டிக்கொண்டு இருந்தனர்.

அரிவாளுடன் நுழைந்தார்:
 
அப்போது திடீரென்று தினேஷ்குமார் கையில் அரிவாளுடன் அந்த வீட்டுக்குள் நுழைந்தார். அரிவாளுடன் ஆக்ரோஷமாக தினேஷ் வருவதைப் பார்த்ததும் பதற்றம் அடைந்த சின்னப்பொண்ணு அவரை தடுத்து நிறுத்தினார்.
 
அப்போது அவரைப் பிடித்து கீழே தள்ளிவிட்டுவிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். பிறகு, தலையை மட்டும் தனியாக துண்டித்துக்கொண்டு ஆவேசமாக வீட்டில் இருந்து கிளம்பிய தினேஷ்குமார், அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் கொண்டு சென்று சாலையில் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
 
ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர்:
 

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் கேசவன் மற்றும் காவலர்கள், நிகழ்விடம் விரைந்து சென்றனர். தலை வேறு, உடல் வேறாக கிடந்த சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
சிறிது நேரத்தில், ரத்தம் தோய்ந்த உடையுடன் வீட்டுக்குள் வந்த தினேஷ்குமாரைப் பார்த்து அவருடைய மனைவி சாரதா அதிர்ச்சி அடைந்தார். ஏதோ விபரீதமான காரியத்தைச் செய்துவிட்டதை உணர்ந்த அவர், கணவரை தனது இருசக்கர வாகனத்தில் அமர வைத்துக்கொண்டு, ஆத்தூர் நகர காவல்நிலையத்தில் இரவு 8.15 மணியளவில் ஒப்படைத்தார்.
 
காவல்துறையினரிடம் சாரதா கூறுகையில், ”வரும் வழியில் என் பெயர் என்ன என்றும், எங்கள் குழந்தையின் பெயர் என்ன என்றெல்லாம் கேட்டுக்கொண்டே வந்தார். திடீரென்று அவராக தனக்குத்தானே ஏதேதோ பேசிக்கொண்டே வந்தார். அவர் நிதானமாகவே இல்லை. வீட்டில் தனியாக இருக்கும் என் குழந்தையையோ அல்லது எங்களையோ ஏதாவது செய்து விடுவார் என்பதால் காவல்துறையில் ஒப்படைக்க கூட்டி வந்தேன்,” என்றார்.

நெல் அறுவடை இயந்திர ஆபரேட்டராக வேலை செய்து வந்த தினேஷ்குமார், கடந்த சில நாள்களாக புத்தி பேதலித்தவர்போல இருந்ததாகக் கூறப்படுகிறது.
 
மனநலம் பாதிக்கப்பட்டவரா?
 

வேலைக்குப் போன இடத்தில், திடீரென்று சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்போல நடந்து கொண்டதால், இயந்திர உரிமையாளர் அவரை வேலையை விட்டு நிறுத்தி விட்டதும் தெரிய வந்தது.
 
கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயார், சம்பவத்தன்று மாலையில்தான், தினேஷ்குமார் வீட்டுக்குச் சென்று பூக்கட்டுவதற்குத் தேவையான நூல்களை வாங்கி வந்ததாகக் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் தினேஷ்குமார் எதற்காக சிறுமியை கழுத்து அறுத்துக் கொலை செய்தார்? என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This: