பார்க்கத்தான் பூனை.. பண்ணிருக்கிற வேலையை பாருங்க!

0
347

ஆள் பார்க்கறதுக்குதான் பூனை மாதிரி, பண்ற வேலையெல்லாம் பாம்பு மாதிரி-ன்னு சொல்லுவோம். இனி இந்த வார்த்தைகளை நாம் சும்மாகூட சொல்லகூட முடியாது.

ஏனென்றால் ஒரு பூனை பாம்பையே கொன்றுவிட்டதாம். வியட்நாம் நாட்டில் யேன் பாய் என்ற பகுதி இருக்கிறது. இங்கு ஒரு வீட்டிற்குள் பாம்பு ஒன்று நுழைய பார்த்தது. அதை வீட்டு வாசப்படியில் உட்கார்ந்திருந்த பூனை பார்த்துவிட்டது.

உடனே அந்த பாம்பை வீட்டிற்குள் போவதற்கு பூனை வழியே விடவில்லை. அது மட்டுமில்லாமல் அந்த பாம்புகிட்ட சண்டைக்கு போய்விட்டது பூனை. இதை கண்ட பாம்பும் பூனையை கடிக்க போனது. பாம்பு சத்தமும், பூனை சத்தம் சரமாறி வந்து விழுந்தது.

தன் கால்களில் உள்ள நகங்களை வைத்து பாம்பை பிராண்டி எடுத்துவிட்டது பூனை. ஒவ்வொரு முறை பாம்பு கடிக்க போகும்போதெல்லாம் பூனை முன்னங்காலை தூக்கி கொண்டு வந்து பிராண்டி விட்டது. இப்படியே பிராண்டி பாம்பு டயர்ட் ஆகி கடைசியில் செத்தே போய்விட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

முதலில் எதிர்ப்புத் தெரித்த பாம்பு, அங்கிருந்தபடியே பூனையைக் கடிக்க முயன்றது, ஆனால் இறுதியில் சோர்ந்து போன அந்தப் பாம்பு மயக்கநிலைக்குச் சென்று உயிரிழந்தது.பூனை சண்டையிட வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Share This: