கிளிநொச்சியில் ஐம்பது ரூபாய் வைத்தியர்! இதுதான் சேவைப் புரட்சி!

0
234

தான் பிறந்த ஊருக்கும் நாட்டுக்கும் சேவை செய்யும் ஒரு வைத்தியர் பற்றியதே இந்த குறிப்பு.

அவர் தான் கிளிநொச்சி மாவட்டத்தில் வைத்தியத்துறையில் சேவை செய்து வரும் வைத்தியர் ரஞ்சன்.

அண்மையில் அவரால் கிளிநொச்சியில் திறக்கப்பட்ட தனியார் வைத்தியசாலையில் நோயாளிகளை பார்வையிடுவதற்காக இவர் அறவிடும் கட்டணம் வெறும் ஐம்பது ரூபாய் மட்டுமே.

கிளிநொச்சி கனகபுரத்தில் பிறந்த இவர் கனகபுரம் மகாவித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரை கனகபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்று அதன் பின்னர் கிளிநொச்சி இந்துக் கல்லூயில் உயர்தரம் கற்றார்.

உயர்தரம் சித்தியடைந்தது யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் கல்வி பயின்று தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் பணிபுரிந்து வருகின்றார்.

கடமை நேரம் தவிர்ந்த நேரத்தில் இவர் தனது தனியார் மருத்துவமனையில் தனது ஊர் மக்களின் நன்மை கருதி இந்த சேவையை செய்து வருகின்றார்.

படித்து பட்டம் பெற்றதும் வெளிநாடுகளுக்கு சென்று அதிக பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் வைத்தியர் ரஞ்சன் அவர்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

Share This: