கதறவைத்த கஜா புயலின் கோரதாண்டவம்… கலங்க வைக்கும் புகைப்படங்கள்.

0
358

தமிழகத்தில் கஜா புயல் நடத்திய கோராதாண்டவத்தில் டெல்டா விவசாய மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
கஜா புயல் தமிழகத்தை உருகுலைய செய்து உள்ளது. தீவிர புயலாக தமிழகத்தை தாக்கிய கஜா புதுக்கோட்டை,  வேதாரண்யம், நாகை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 
05_1
03_2
02_1

கஜா புயல் தாக்கம் டெல்டா மாவட்டங்களை பெரிதும் பாதிப்படைய வைத்துள்ளது. டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை, சோழம் போன்றவை வேரோடு சாய்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கி உள்ளது.
10_0
09

விவசாயிகள் தங்கள் பிள்ளை போல் வளர்த்து வந்த ஏராளமான கால்நடைகளும் கஜா புயலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளன. கால்நடை பரிதாபமாக உயிரிழந்துள்ளதை பார்த்த பலர் செய்வது அறியாது கண்கலங்கி உள்ளனர்.
10
08
04_1
06_0

கஜா புயலினால் பாதிப்படைந்த பகுதிகளில் சாலைகள், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையும்,  உரிய நிவாரணப் பொருட்கள் எடுத்து செல்ல முடியாத சூழலும் நிலவுகிறது.

Share This: