கடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்!

0
339

மரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம் தவராசா இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 69

வடமராட்சி பொலிகண்டி கிழக்கைச் சேர்ந்த சிவலிங்கம், தமிழரின் மரபுக் கலைகளான சிலம்பாட்டம், உடுக்கு போன்றவற்றில் பாண்டித்தியம் பெற்றவராகத் திகழ்தார்.

இறுதிவரை அவற்றை இளையவர்களிற்கு கற்றுக் கொடுப்பதில் ஆர்வமாக இருந்தார். அவரிடம் மரபு கலைகளை கற்ற ஏராளமான மாணவர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
FB_IMG_1543481001711
FB_IMG_1543481003886
FB_IMG_1543481006168
FB_IMG_1543481008280
FB_IMG_1543481010583
FB_IMG_1543481013248
FB_IMG_1543481015952
FB_IMG_1543481017954
FB_IMG_1543481022167
FB_IMG_1543481024902
FB_IMG_1543481027070
FB_IMG_1543481029303
FB_IMG_1543477278055

Share This: