வவுனியா மாவட்டத்திற்கு வீட்டுத்தோட்ட வளர்ப்பின் மூலம் பெருமை சேர்த்துள்ள பெண்! அகில இலங்கை போட்டிக்கும் தேர்வு!

0
259

வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில் வசித்து வரும் பழனியப்பன் பிரியதர்சினி (வயது – 31) வீட்டுத்தேட்ட பயிர்ச்செய்கையில் கிராம, மாவட்ட, மாகாண மட்ட தேர்வில் முதலாம் இடத்தினை பெற்று வவுனியா மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்துள்ளார்.

பம்மைமடு விவசாய திணைக்களத்திற்குட்பட்ட பிரிவில் கடந்த 05.09.2018ம் திகதி இடம்பெற்ற  தெரிவில் முதலாவது இடத்தினையும் 10.10.2018ம் திகதி இடம்பெற்ற மாவட்ட மட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும் 12.11.2018ம் திகதி இடம்பெற்ற மாகாண மட்ட தெரிவில் முதலாவது இடத்தினையும் பெற்று அகில இலங்கை ரீதியில் இடம்பெறும் தெரிவுக்கு சென்றுள்ளனர்.

இவரது வீட்டுத் தோட்டத்தில்  வாழை, கப்பல், செங்கதலி,  இதரை, சாம்பல், சீனிக்கதலி , பப்பாசி, கொய்யா, மாதுளை, பலா, சீத்தா பழம், இலந்தை, உக்குரச, ஜம்பு, அன்னாசி, லெமன், அர நெல்லி, நெல்லி, செரி, எலுமிச்சை, பெஷன் புறூட், பட்டர் புறூட், அம்பிரலங்காய், கத்தரி, வெண்டி, பயிற்றங்காய், அவரை, தம்பலை, பூசணி, வேம்பு, முருங்கை, கறி மிளகாய், வெங்காயம் , சுண்டக்காய் , பீர்க்கங்காய் , பச்சை மிளகாய், மூட்டை மிளகாய், வானம் பார்த்த மிளகாய், முள்ளங்கி, தக்காளி, போஞ்சி, வல்லாரை, சாரணை, சண்டி கீரை, பொன்னாங்காணி, சிவப்புப் பசளி, தக்காளிக் கீரை, அகத்தி, பச்சைப் பசளி, புளிச்சைக் கீரை, கங்குன், கொத்துப் பசளி, முளைக் கீரை, புதினா, மல்லி இலை, மரவள்ளி (3,6 மாதம்), உருளைக்கிழங்கு, சேமன் கிழங்கு, சீனி வாழைக் கிழங்கு, வற்றாளைக் கிழங்கு, ரம்பை, இஞ்சி, கறிவேப்பிலை, கடுகு, மஞ்சள், உள்ளி (வெள்ளைப் பூண்டு), கற்பூரவள்ளி, சோற்றுக்கற்றாளை, குறிஞ்சா, தூதுவளை, பிரண்டை , குப்பைமேனி , ஆடாதோடை , வெற்றிலை, துளசி, அரத்தை, முடக்கொத்தான், கொல்வாய், இஞ்சி, பாம்புக் கற்றாளை, ரோஜா, சூரியகாந்தி, செம்பருத்தி, நித்திய கல்யாணி, அந்தி மந்தாரம், பொட்டில் பிரஸ், மணி பிளான்ட், செவ்வந்தி, அந்தூரியம், கரும்பு, வில்வம், அரசமரம், பாக்கு, மூங்கில், கிளிசூரியா, வேம்பு, தென்னை மற்றும் சோளம் போன்றன காணப்படுகின்றன .

அத்துடன் கோழி வளர்ப்பு, தாரா வளர்ப்பு, மீன் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நெற்பயிர்ச்செய்கை, மண்புழு திரவம் உரம் தயாரித்தல், தேனீ வளர்ப்பு, அசோலா வளர்ப்பு, சேதனப் பசளை தயாரித்தல், ஐடோ தாவர வளர்ப்பு, சொட்டு நீர்ப்பாசனத்தில் பயிர்ச்செய்கை, இயற்கை பூச்சி தடுப்புமுறை, தோட்டத்திற்கு பயன்படுத்தும் பசளை (இயற்கை), கோழி எரு, மீன் தண்ணீர், ஆட்டு உரம், மாட்டெரு, மண்புழு உரம், சேதனப் பசளை, தோட்டத்திற்குப் பயன்படுத்தும் கிருமி கொள்ளி (நாசினி இயற்கை), உள்ளிக் கரைசல், சாம்பல், மஞ்சள், வேப்பஞ்சாறு, சவர்க்காரக் கரைசல் போன்றன காணப்படுகின்றன.

தனது வளர்ச்சிப்பாதை தொடர்பாக பழனியப்பன் பிரியதர்சினி கருத்து தெரிவிக்கையில்,

விவசாய திணைக்கள ஊழியர் ஒருவர் எனக்கு வழங்கிய உற்சாகத்தினால் தான் நான் வீட்டுத்தோட்டத்தினை கடந்த ஒரு வருடகாலமாகவே இவ் வீட்டுத்தோட்டத்தினை மேற்கொண்டு இந்தளவு சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகின்றேன்.

எங்களது வீட்டுத்தோட்டத்தில் இருப்பது முழுவதுமே இயக்கையானது எந்தவோரு செயற்கையான மருத்துகள், பசளைகள் எதுவுமே நாங்கள் பயன்படுத்துவதில்லை எனவும் அகில இலங்கை ரீதியில் வெற்றியினை தனதாக்கி கொள்வதே தனது இலட்சியம் என தெரிவித்தார்.

கிராம அலுவர், சமூர்த்தி உத்தியோகத்தர், சமூர்த்தி முகாமையாளர், விவசாய திணைக்கள ஊழியர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என பலரும் இவ் வீட்டுத்தோட்டத்தினை பார்வையிட்டு வருகின்றனர்.
FB_IMG_1544450870632
FB_IMG_1544450873555
FB_IMG_1544450875722
DSC_0244-1
DSC_0307
DSC_0306
DSC_0304
DSC_0272
DSC_0270
DSC_0265
DSC_0264
DSC_0263
DSC_0276
DSC_0277
DSC_0278DSC_0279
DSC_0280
DSC_0288
DSC_0285
DSC_0283
DSC_0259
DSC_0257
DSC_0256
DSC_0251
DSC_0249
DSC_0248
DSC_0246
DSC_0245
DSC_0244
DSC_0255

Share This: