கராத்தே துறையில் சர்வதேச ரீதியில் பட்டம் வென்று சாதனை படைத்த ஈழத் தமிழர்!!

0
293

ஐரோப்பாவில் புகழ் வாய்ந்த கராத்தே நிபுணர் ஸ்கொட் லாங்கிலி மற்றும் பயிற்றுனர் குழுவால் நடாத்தப்பட்ட முழுநேர ஒரு மாதகால கராத்தே பயிற்றுனருக்கான சிறப்பு பயிற்சிநெறியை சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரெனசனல் இலங்கை கழக பிரதம பயிற்றுனர் சென்செய். அன்ரோ டினேஸ் நிறைவுசெய்துள்ளார்.
DSC00624__1_-1-1068x801-01

அயர்லாந்தின் தலைநகரில் அமைந்துள்ள கொம்பு டோஜோ கராத்தே இன்ரநெசனல் (Hombu Dojo Karate International ) தலைமையகத்தில் நடைபெற்ற கராத்தே பரீட்சகருக்கான (Grading Examiner) எழுத்துமூல தேர்விலும் அன்ரோ டினேஸ் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரேசில் நாட்டைச்சேர்ந்த கராத்தே நிபுணர் மார்ட்டின் பிலிப்பே இனால் நடாத்தப்பட்ட கராத்தே பயிற்சிப் பட்டறையிலும் அன்ரோ டினேஸ் பங்குபற்றியுள்ளார்.

மேற்படி பயிற்சிநெறியில் கராத்தே உயர்நுட்பங்கள், உடலின் அசைவுகள், உடற் பொறிமுறை போன்ற பல்வேறு பாடத்திட்டங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. மேலும், கொம்பு டோஜோ கராத்தே இன்ரநெசனல் Hombu Dojo Karate International இன் இலங்கைக்கான பிரதிநிதியாக சென்செய்.யூடின் சிந்துஜன் மற்றும் இலங்கைக்கான தொழில்நுட்ப பணிப்பாளராக சென்செய்.அன்ரோ டினேஸ் ஆகியோர் மேற்படி தலைமையகத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Share This: