இலங்கை ‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட்டம்.

0
497

இலங்கையின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் ராட்சத ‘பட்ட திருவிழா’ நடைபெறுவது வழக்கம்.

வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இந்த ராட்சத பட்டத் திருவிழா இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
_105201179_pattam

இலங்கையில் எங்குமில்லாதவாறு ராட்சத பட்டங்களை பறக்கவிடுவது இந்த பட்டத் திருவிழாவின் சிறப்பு அம்சமாகும்.

இந்த ஆண்டு (2019 பொங்கல்) பட்டத் திருவிழாவில் பார்வையாளர்களின் கண்ணைக்கவரும் விதமாக முப்பரிமான தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்ட 80க்கும் மேற்பட்ட பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன.

பட்டத் திருவிழாவினை காண யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலிருந்தும் ஆண்டு தோறும் பெருமளவிலான மக்கள் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் ஒன்றுகூடுகின்றார்கள்.

இம்முறை பட்டத் திருவிழாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின் சீருடைக்கு ஒத்த நிறத்தில் உள்ள தரை மற்றும் கடலில் தாக்குதல் நடத்த கூடியவாறான போர் டாங்கி மற்றும் படகு அமைப்பில் வடிவமைக்கப்பட்ட பட்டங்களும் வானில் பறக்கவிடப்பட்டன.

“செய் அல்லது செத்துமடி” எனும் வாசகத்துடன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முதல் பெண் கரும்புலியான அங்கயற்கண்ணி பெயர் பொறிக்கப்பட்ட படகு பட்டம் பறக்கவிடப்பட்டது. இந்த பட்டம் வானில் பறந்தபோது பலரும் கரகோஷம் எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊர் வல்வெட்டித்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: BBC
DSC_8070-1024x684
DSC_8071-1024x684
DSC_8072-1024x684
DSC_8073-1024x684
DSC_8078-1024x684
DSC_8078-1024x684
DSC_8091-1024x684
DSC_8094-1024x684
DSC_8095-1024x684
DSC_8098-1024x684
DSC_8100-1024x684
DSC_8106-1024x684
DSC_8109-1024x684
DSC_8112-1024x684
DSC_8114-1024x684
DSC_8115-1024x684
DSC_8118-1024x684
DSC_8122-1024x684
DSC_8128-1024x684
DSC_8130-1024x684
DSC_8139-1024x684
DSC_8140-1024x684
DSC_8141-1024x684
DSC_8144-1024x684
DSC_8148-1024x684
DSC_8149-1024x684
DSC_8151-1024x684
DSC_8152-1024x684
DSC_8156-1024x684
DSC_8162-1024x684
DSC_8165-1024x684
DSC_8166-1024x684
DSC_8168-1024x684
DSC_8171-1024x684
DSC_8173-1024x684
DSC_8179-1024x684
DSC_8183-1024x684
DSC_8185-1024x684
DSC_8187-1024x684
DSC_8190-1024x684
DSC_8191-1024x684
DSC_8193-1024x684
DSC_8195-1024x684
DSC_8196-1024x684
DSC_8199-1024x684
20191171313141image

பட்டத்திருவிழாவில் முதல் 15 இடங்களைச் சுவீகரித்த பட்டங்கள்

1 ம் இடம் – விநோத சமையலறை (ம.பிரசாந்)
2 ம் இடம் – ராதையும் புஸ்பக விமானமும் (த.தயாளன்)
3 ம் இடம் – றியல் வன் பீரங்கி (ஸ்ரீ.நிரோசன்)
4 ம் இடம் – ஆகாயத்தில் தைக்கும் மங்கையுடன் தையல் இயந்திரமும் (மோ.வினோதன்)
5 ம் இடம் – கல்லுடைக்கும் இயந்திரம் (ரா.தீபன்ராஜ்)
6 ம் இடம் – படகு வலிக்கும் மீனவன் (ஜெ.விஜயராகவன்
7 ம் இடம் – 3D கொக்கு (பூ.அருள்ராஸா)
8 ம் இடம் – Hand Driller (ம.லக்ஸ்மன்)
9 ம் இடம் – பறக்கும் சிறுவர் பூங்கா (சாம்ஜெயவேல்)
10 ம் இடம்- இராட்சத கடல் மிருகமும் சித்திரக் குள்ளனும் (ஜெ.நிகிலன்)
11 ம் இடம்- தைத்திருநாள் கொண்டாட்டம் (ப.இளவரசன்)
12 ம் இடம்- விண்வெளி வானிலை மையம்(ச.மகேஸ்வரன்)
13 ம் இடம்- சி.டனுசன்(எயார்போர்ட்)
14 ம் இடம்- இராணுவ பீரங்கி (மு.திபாகர்)
15 ம் இடம்- சுழலும் நட்சத்திரம் (பூ.அருள்ராஜா)

Share This: