புத்தா சுத்தமாய் உன்னை பிடிக்கல எண்டு சத்தமாய் கத்தியே சொல்லுறன்!

0
281

புத்தா சுத்தமாய்
உன்னை பிடிக்கல எண்டு
சத்தமாய் கத்தியே சொல்லுறன்

உன் பக்தன்கள்
எல்லாம் பித்து பிடித்து
மொத்தமாய் சுத்துரானுகள்
எம்மவர் நிலத்தில்

கொத்துக் குண்டு போட்டே
கொன்றான் முல்லை நிலத்தில்
செந்தமிழ் சிறக்க நாந்தமிழ்
ஆண்ட அண்ணனின் மண்ணில்
கொன்றவர் வணங்கும் உன்னை
கண்டவர் வைக்க எம்மண்
அமைதி தான் காக்குமா

புத்தா சுத்தமாய்
உன்னை பிடிக்கல

வெந்தவர் மண்ணை
பண்ணைகள் அமைத்து
சொத்தென கொடுத்து
தேற்றி கொண்டாய்
நெல்லை மண்ணை
கொள்ளைகள் அடித்து
உனக்கு கொட்டிலும் போடுறான்

புத்தா உன் சிலை வைக்க
என் தேசம் எதற்கு
கதிர்காமம் போனாய் அங்கு
கதிர்காமரை காணோம்
எம் தேசம் வந்தாய்
எம்பெருமானை தொலைத்தோம்
நல்லூர் நாடினாய்
வேலவனை தேடினோம்
கோணேச்சரம் போனோம்
கோயிலையே காணோம்

பாரெங்கும் நாமிருக்க -நம்
நாடுதான் நீ இருக்கவோ
தேடுகிறோம் எம்மவரை
வாழ்வுக்கு வழி கொடுக்க

புத்தா சுத்தமாய்
உன்னை பிடிக்கல
கத்தியே சொல்லுறன்

புலி யூரன்

Share This: